என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
    • கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

    இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.

    • பீகார் SIR செயல்முறையின்போது 65 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக புகார்.
    • ஆதார் கார்டை 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு.

    பீகார் மாநிலத்தில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் முறைகேடு நடந்ததாகவும், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், பீகார் SIR நடைமுறையில் ஏதாவது முறைகேடு கண்டறியப்பட்டால், உடனடியாக பீகார் SIR நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும். அக்டோபர் 7ஆம் தேதி இறுதி விவாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அத்துடன் தற்காலிகமாக இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்காமல், இறுதி தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

    செப்டம்பர் 8ஆம் தேதி ஆதார்டு கார்டையும் செல்லுபடியாகும் 12ஆவது ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    • வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக என விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்தது.
    • சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி மையத்திற்கு முறைகேடாக இந்தியா மற்றும் வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக யானைகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.

    இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் விதிகளை பின்பற்றியே வெளிநாடுகளில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், "வந்தாரா சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அதைக் கெடுக்காதீர்கள், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
    • வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை முன்னெடுத்து, துறைகளில் கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து என்ஜினீயர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நேஹா. தன் கணவர் நாகேஷ்வருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்த நாளில் இருந்து மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். நேஹா விவகாரத்து கேட்டும் நாகேஷ்வர் மறுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிகளவில் மதுவாங்கி கொடுத்து நேஹாவும் ஜிதேந்திராவும் கழுத்தை நெரித்து அவரை கொைல செய்தனர்.

    பின்னர் நாகேஷ்வர் உடலை பைக்கில் 25 கி.மீ. தூரம் கொண்டு சென்று விபத்தில் அவர் இறந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரம் கிடந்த பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேஹாவும், ஜிதேந்திராவும் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது
    • வக்ஃபு வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, அகில இந்திய மஜ்லிஸ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடது சாரிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. வக்பு திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

    வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு வாரியம் அமைக்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய வக்பு சட்டத்தின் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    மேலும், வக்பு வாரியத்தில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் 4 முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    • இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார்.
    • மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம் அளித்தனர். 

    • கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
    • தனிநபர் பண பரிவர்த்தனை ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.

    இன்று முதல் UPI மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.

    தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.

    • ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • தொழில்நுட்ப சிக்கல்களால் வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வோர் அவதியடைந்தனர்.

    2025-26 ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

    இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்துவரும் நிலையில் தொழில்நுட்ப சிக்கல்களால் அவதியடைந்துள்ளனர்.

    வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வழக்கமாக ஜூலை 31, 2025 அன்று முடிவடையும்.

    ஐடிஆர் படிவங்களில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
    • உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.

    உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய டாக்டர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

    • பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் 14 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.
    • உலகின் பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்றார் ஜே.பி.நட்டா.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஜக சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாங்கள் 14 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.

    இந்தியாவில் 20 மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும், 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது.

    எங்களிடம் 240 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். சுமார் 1,500 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 170க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.க்கள் உள்ளனர்.

    பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 11 ஆண்டுகளில் செயல்திறன் கொண்ட, பொறுப்புணர்வுள்ள அரசு அமைந்துள்ளது.

    மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது.

    ஜிஎஸ்டியை 2 அடுக்காக சீர்த்திருத்தம் செய்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார் என தெரிவித்தார்.

    • தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
    • தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது.

    நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜவுக்காக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு மோசடி செய்ததாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி உறுதிமொழி பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் மீது பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 2010-2012 கால கட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறை கூறுவதற்கு பதிலாக உரிய விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை குறித்து விசாரிக்கும் கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. 

    அவர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை தேவை. தேர்தல் ஆணையத்தின் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் நான் கேட்கும்போதெல்லாம், அது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேர்தல் ஆணையம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

    மேலும் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்திய விதத்திற்காக தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய அவர், தேர்தல் ஆணையம் ஏராளமான பிரச்சனைகளைத் தொடங்கியது மட்டுமல்லாமல், குளவி கூட்டையும் தொட்டுள்ளது. இது அதற்கு சேதத்தை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.  

    ×