என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurukshetra"

    • அயோத்தி ராமர் கோவிலில் இன்று கொடியேற்றப்பட்டது.
    • குருஷேத்திர மண்ணில் பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

    சண்டிகர்:

    சீக்கிய மத குருவான தேஜ் பகதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழா அரியானா மாநிலத்தின் குருஷேத்திரத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று இந்தியாவின் பாரம்பரியத்தின் அற்புதமான நாள். காலை அயோத்தியில் இருந்தேன். மாலை, பகவத்கீதை நகரமான குருஷேத்திரத்தில் இருக்கிறேன்.

    ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350வது தியாக நாளில் நாம் அனைவரும் இங்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

    ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறியுள்ளது. அன்றே ராமர் கோவிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது.

    இன்று அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தினரிடம் இருந்து ஆசிகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

    குருஷேத்திர மண்ணில் இன்று பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது.

    குரு தேஜ் பகதூர் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைப் பாதுகாப்பதை தனது மதமாக கருதினார். அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

    நாம் அமைதியையே விரும்புகிறோம். பாதுகாப்பில் சமரசத்தை அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என தெரிவித்தார்.

    • மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டி.
    • பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சிக்கு 'தர்மம்' உள்ளது என்றும், ஆனால், 'தர்மம்' வேண்டுமா அல்லது 'அதர்மம்' வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர், அந்த தொகுதியில் இருந்து தனது கட்சி வேட்பாளர் சுஷில் குப்தாவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிசும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டணியின் கீழ், மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

    மேலும், கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், மகாபாரதத்தை எடுத்துரைத்து, "குருக்ஷேத்திரம் 'தர்மயுத்' போராடிய புண்ணிய பூமி" என்றார்.

    'கௌரவர்கள்' அனைத்தையும் கொண்டிருந்தாலும் 'பாண்டவர்கள்' வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் கூறினார்.

    "பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார். இன்று, நம்மிடம் என்ன இருக்கிறது. நாம் மிகவும் சிறியவர்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்?" என்றார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசை குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், "அவர்களிடம் எல்லாம் உள்ளது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் ஐபி, சிபிஐ, இடி உள்ளது" என்றார்.

    "எங்களுடைய 'தர்மம்' (நீதி) எங்களிடம் உள்ளது. இது 'தர்மம்' மற்றும் 'அதர்மம்' (அதர்மம்' (அதர்மம்) ஆகியவற்றிற்கிடையே நடக்கும் சண்டையாகும். மேலும், இதில் 'தர்மம்' அல்லது 'அதர்மம்' எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

    நான் டெல்லியில் இருந்து கூப்பிய கைகளுடன் உங்கள் வாக்குகளை கேட்க வந்தேன். சுஷில் குப்தா ஜி வீடு வீடாக சென்று உங்கள் வாக்குகளை கேட்கிறார். தேர்தலில் வெற்றி பெற உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவை. அவர்களுக்கு (பாஜக) உங்கள் வாக்குகள் தேவையில்லை" என்றார்.

    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.
    அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. 

    துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


     
    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    ×