search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீங்கள் தர்மம் பக்கமா..? அதர்மம் பக்கமா..?- பிரச்சார கூட்டத்தில் கெஜ்ரிவால் உரை
    X

    நீங்கள் தர்மம் பக்கமா..? அதர்மம் பக்கமா..?- பிரச்சார கூட்டத்தில் கெஜ்ரிவால் உரை

    • மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டி.
    • பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார்.

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது கட்சிக்கு 'தர்மம்' உள்ளது என்றும், ஆனால், 'தர்மம்' வேண்டுமா அல்லது 'அதர்மம்' வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    அரியானாவின் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர், அந்த தொகுதியில் இருந்து தனது கட்சி வேட்பாளர் சுஷில் குப்தாவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

    அரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிசும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கூட்டணியின் கீழ், மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே குருஷேத்ரா தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

    மேலும், கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், மகாபாரதத்தை எடுத்துரைத்து, "குருக்ஷேத்திரம் 'தர்மயுத்' போராடிய புண்ணிய பூமி" என்றார்.

    'கௌரவர்கள்' அனைத்தையும் கொண்டிருந்தாலும் 'பாண்டவர்கள்' வெற்றி பெற்றதாக கெஜ்ரிவால் கூறினார்.

    "பாண்டவர்களுக்கு என்ன இருந்தது? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடன் இருந்தார். இன்று, நம்மிடம் என்ன இருக்கிறது. நாம் மிகவும் சிறியவர்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்?" என்றார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசை குறிப்பிட்டு பேசிய கெஜ்ரிவால், "அவர்களிடம் எல்லாம் உள்ளது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவர்களிடம் ஐபி, சிபிஐ, இடி உள்ளது" என்றார்.

    "எங்களுடைய 'தர்மம்' (நீதி) எங்களிடம் உள்ளது. இது 'தர்மம்' மற்றும் 'அதர்மம்' (அதர்மம்' (அதர்மம்) ஆகியவற்றிற்கிடையே நடக்கும் சண்டையாகும். மேலும், இதில் 'தர்மம்' அல்லது 'அதர்மம்' எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

    நான் டெல்லியில் இருந்து கூப்பிய கைகளுடன் உங்கள் வாக்குகளை கேட்க வந்தேன். சுஷில் குப்தா ஜி வீடு வீடாக சென்று உங்கள் வாக்குகளை கேட்கிறார். தேர்தலில் வெற்றி பெற உங்கள் வாக்குகள் எங்களுக்கு தேவை. அவர்களுக்கு (பாஜக) உங்கள் வாக்குகள் தேவையில்லை" என்றார்.

    Next Story
    ×