என் மலர்
இந்தியா
- மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை.
- எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது
மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியைத் தொடங்கிய எதிா்க்கட்சிகள், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தன.
கடந்த 3-ந்தேதி மக்களவையில் காகிதங்களை கிழித்து அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சபாநாயகர் ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமா்வு மாா்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்றத்தை நடத்துவதில் ராகுல்காந்திக்கு ஆர்வம் இல்லை. பிரச்சினைகளை உருவாக்குவதில் அவர் விருப்பம் காட்டுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நல்ல நாட்கள் வரும் என்று ராகுல் காந்திக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாடம் நடத்துகின்றன. அதனால் தான் அவர் அவையை முடக்கி வருகிறார்.
பாராளுமன்றத்தில் நிலவும் சூழ்நிலையை தணிக்க மத்திய அரசு காங்கிரசை சமாதானப்படுத்த கூடுதலாக எதுவும் செய்யப் போவதில்லை. பல முயற்சிகள் வீணாகிவிட்டன.
தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியால் காங்கிரஸ் கட்சி விரக்தி அடைந்து உள்ளது. நிலைமையை மாற்ற அவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால் காங்கிரசுக்கான நாட்கள் வராது. அடுத்த தேர்தல்களிலும் அவர்களது எண்ணிக்கை (மக்களவை) மேலும் குறையும்.
அனைத்து எதிர்க்கட்சி களும் காங்கிரசுடன் இல்லை. சிறிய கட்சிகள் அந்தந்த கட்சி நேரத்தை பயன்படுத்த முடியவில்லை. இதனால் ராகுல்காந்தி மீது சிறிய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. அவையை முடக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மீது அழுத்தம் இருக்கிறது.
எதிர்க்கட்சிகளில் சிலர் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை. அவை செயல்பட வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி மக்களவையில் பேசுவதை தவிர்த்தார்.
- மோடி உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில் இருந்து ஓடிப் போகிறார். ஆனால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு (PTI) பேட்டியளிக்கிறார். இந்த பேட்டி வெற்று வார்த்தைகள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெரிக் ஓ'பிரையன் வெிமர்சனம் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானம் தொடர்பான விவாவதத்தின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை தாக்க இருந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது. இதனால் மக்களவைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மோடி விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
- முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது.
- தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
மத்திய கல்வி பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக் கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
முக்கிய தேர்வுகள் நாளை தொடங்கி மார்ச் மாதம் 7 தேதி முடிந்து விடுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும் 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது.
சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
- 7 தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
எஸ்.ஐ.ஆர். பணியின்போது பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்ட அம்மாநிலத்தை சேர்ந்த 7 தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கடமை தவறுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது
- BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது
பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி காட்டியுள்ளது.
இதன்படி, இனி புரோக்கர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் போது, அந்தப் பணத்திற்கு இணையான 100% பிணையை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக (Proprietary Trading) வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் பங்குச்சந்தை தரகு நிறுவனங்களான BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது
- மாநிலத்தின் ஸ்வர்ணந்திரா தொலைநோக்கு 2047 குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார்.
- அமராவதிக்கு அருகிலுள்ள உண்டவல்லி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய வயலைப் பார்வையிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆந்திராவில் சஞ்சீவானி மருத்துவ சேவை உள்ளிட்ட சில முக்கிய சமூகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பில்கேட்ஸ் இன்று ஆந்திரா வந்தார்.
அமராவதியில் உள்ள மாநில தலைமை செயலகத்திற்கு சென்றார். பில்கேட்ஸுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் பில் கேட்ஸ் குழுவினர் அவர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, பில்கேட்ஸ் சந்திப்பு நடந்தது.
கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொது சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் முழுவதும் சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகால இலக்குகளை கோடிட்டுக் காட்டும் மாநிலத்தின் ஸ்வர்ணந்திரா தொலைநோக்கு 2047 குறித்து சந்திரபாபு நாயுடு விளக்கினார்.
மெட்டெக் திட்டங்கள், நோயறிதல் சேவைகள், துல்லியம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயம் மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சஞ்சீவனி திட்டம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
பின்னர், பில்கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து, அமராவதிக்கு அருகிலுள்ள உண்டவல்லி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய வயலைப் பார்வையிட்டார். டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்பட்ட விவசாய நடைமுறைகளை அவரது குழு பார்வையிட்டனர்.
தொழில்நுட்பம் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தில் நிலையான விவசாயத்தை ஆதரிக்க முடியும் என செயல்விளக்கம் அளித்தனர்.
ஆந்திர மாநில அரசின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டினார். மேலும் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
- மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு.
- சபரிமலை மட்டுமில்லாமல் பிற மதங்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க முடிவு.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பக்தர்களும், அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மனு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை மட்டுமில்லாமல் பிற மதங்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வழக்குகளை ஒருங்கிணைத்து நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் சபரிமலை வழக்கின் இறுதி வாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
- சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
- சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வானில் சிறப்பு விமானம் வட்டமிட்டப்படி காத்திருந்தது.
- சம்பவம் இன்று காலை விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆந்திராவில் சஞ்சீவானி மருத்துவ சேவை உள்ளிட்ட சில முக்கிய சமூகத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
மேலும் அவர் அமராவதியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.
இதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை பில்கேட்ஸ் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
காலையில், விஜயவாடாவை சுற்றியுள்ள பகுதிகளை அடர்ந்த மூடுபனி மூடியதால், ஓடுபாதை தெளிவாகத் தெரியவில்லை.
விமான இயக்கங்களுக்கான தெரிவுநிலை குறைந்தபட்ச நிலைக்குக் குறைந்தது.
இதனால் பில்கேட்ஸின் தனியார் ஜெட் விமான நிலையத்தை அடைந்தாலும், சிக்னல் கிடைக்காததால் விமானம் உடனடியாக இறங்க முடியவில்லை.
சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வானில் சிறப்பு விமானம் வட்டமிட்டப்படி காத்திருந்தது. பனி விலகிய பிறகு வானிலை ஓரளவு மேம்பட்டதால், விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன்பிறகு பில்கேட்ஸை ஆந்திர அதிகாரிகள் வரவேற்று பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
- ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
பீகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்தார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஊடக வெளிச்சத்திலேயே இருந்து வந்தார்.
குறிப்பாக, மைதிலி தாகூர் தமிழின் மீது கொண்டுள்ள ஆர்வம் உண்மையிலேயே வியக்கத்தக்கது. "முத்தையருள் பத்தித் திருநகை..." என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாக்கூர் முருகன் பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழின் கடினமான சந்தப் பாடல்களை இவ்வளவு துல்லியமான உச்சரிப்புடன் பாடுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
- மணிசங்கர் அய்யர் பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது.
திருவனந்தபுரம்:
தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் வெல்ல நினைக்கிறது.
கேரளாவில் சமீபத்திய நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க.வை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் 1931-ல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ள நிலையில், மணிசங்கர் அய்யர் பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார் எனக்கூறியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- மகாசிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.
- சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.
பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமிக்கத்தக்க மணல் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.
இந்த ஆண்டும் (2026) அவர் தனது கலைத்திறமையால் சிவபெருமானின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ளார்.
சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.






