பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணத்தில் உருவான 'மகா சிவன்'

மகாசிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணத்தில் உருவான 'மகா சிவன்'
Published on

மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.

பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமிக்கத்தக்க மணல் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.

இந்த ஆண்டும் (2026) அவர் தனது கலைத்திறமையால் சிவபெருமானின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ளார்.

சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com