என் மலர்
ஈரோடு
- கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தெருக்களில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தி வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை போடுவதற்காக சிவப்பு மற்றும் பச்சை நிற சிறிய குப்பைத் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
காய்கறி கழிவுகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள் இவையெல்லாம் மக்கும் குப்பைகள் எனவும், இதனை ஒரு குப்பைத்தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரிபேக்ஸ் போன்றவைகளை மக்காத குப்பைகள் எனவும் அந்த குப்பைகளை மற்றொரு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும், தெருக்களில் அந்த குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூத்தம்பூண்டி ஊராட்சி தலைவர் பாவாயம்மாள் ராமசாமி, ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
- இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.
இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:
எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.
இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த பிளஸ்-௨ மாணவி காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
- இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்தி நகர் மெயின் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது மகள் பவித்ரா (17) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை பள்ளிக்கு செல்வதாக கிளம்பி சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும், அவரது நண்பர்களிடம் விசாரித்த போது மாணவி பவித்ரா பள்ளிக்கு வரவில்லை என்று கூறினர். இதனால் பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் தேடியும், விசாரித்த போது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை டவுன் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவபட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.
மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார்.
- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார்.
சித்தோடு:
சித்தோடு அருகே உள்ள ஆட்டையாம்பாளையம், கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி (77). இவரது மனைவி அன்ன பூரணி(57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு அருகில் அவர்களது மகன் செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு, முத்துசாமியின் வீட்டில் இருந்து தற்காலிகமாக மின் இணைப்பு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் ஈரோடு நகர் பகுதியான சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு,
மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழைய பாளையம், பெரியவலசு, பாப்பாத்தி க்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன்தோட்டம், 16 ரோடு, நாராயணவலசு, குமலன்குட்டை, டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு, காந்திஜிரோடு, பெரியார் நகர், ஈ.வி.என்.ரோடு, மேட்டூர்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோல் காசிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் சூரம்பட்டிவலசு, ரெயில்நகர், கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை பகுதி, காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது முதல் 8-வது பகுதி வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
கஸ்பாபேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம்,
நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டகோத்தாம் பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதிநகர், மூலப்பா ளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான் வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
எழுமாத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம் பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
சிவகிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பா ளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்கு புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
- சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சித்தோடு:
சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.
எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
- இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பவானி அருகிலுள்ள சித்தோடு சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் கார் அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
- விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தோடு:
சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளாராக இருப்பவர் சுரேஷ் (50) . இவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காரில் சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்றார். காரை டிரைவர் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (46) என்பவர் ஓட்டிச் சென்றார்.
கார் பவானி அருகிலுள்ள சித்தோடு, நசியனூர் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நெடுஞ்சாலைத்துறை கார் டிரைவர் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். காரில் பயணம் செய்த சேலம் நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுரேஷ் (50) காயத்துடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று இறந்த பச்சியப்பன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவர் கோபால் என்பவரிடம் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
- மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.
இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.
இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.
மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.
ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:
மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.
- கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
- இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, ஜூன். 22-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.
அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.
அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.
இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.






