என் மலர்
சென்னை
- தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
- தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி. க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட்டு தருவதாகக் கூறி தனது கடமையை செய்துள்ளது அ.தி.மு.க.
* அனைத்து கட்சிகளிலும் அரசியல் என்பது தேர்தலை நோக்கிதான் செல்கிறது.
* 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
* 2024 தேர்தலின்போது மாநிலங்களவை சீட் குறித்து எந்த வருடம் என குறிப்பிடாமல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* அறிவிக்கும் இடத்தில் அ.தி.மு.க. உள்ளதால் அதன் கடமையை தற்போது செய்துள்ளது.
* யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஜனவரி மாதம் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிக்கப்படும்.
தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
- தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது.
மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,
தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது. 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.
- தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்தவர் அஞ்சலை அம்மாள்.
- தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள், கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
- சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரியில் மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி மே மாதம் 31-ந் தேதி வரையில் பெய்யக்கூடிய மழையை கோடை மழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கோடை மழை ஆரம்பத்தில் இருந்தே பல இடங்களில் பெய்ய தொடங்கியது. நேற்றுடன் கோடை மழை கணக்கு நிறைவு பெற்றது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த காலகட்டங்களில் 12.4 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு இயல்பைவிட 97 சதவீதம் அதிகமாக அதாவது 24.5 செ.மீ. மழை பொழிந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக நெல்லை 260 சதவீதம் அதிகமாகவும், கடலூர் 226 சதவீதம் அதிகமாகவும் மழை பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு வெப்ப அலைகளின் தாக்கமும், அதீத வெப்பத்தின் தாக்கமும் இல்லாத கோடை காலமாகவும், இயல்புக்கு அதிகமாக பதிவான கோடை மழையும் இந்த ஆண்டு இருந்து இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வரும் சூழலில், இனிவரும் நாட்களில் அதாவது வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) வரை பருவமழையின் தீவிரம் சற்று குறைந்தே காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 12-ந் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் பருவமழை 15-ந் தேதியில் இருந்து தீவிரம் அடைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பருவமழை தொய்வடைவது, வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக இம்மாதம் முதல் வாரத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப்படும்.
அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழையும் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
அந்த வகையில் இந்த மாதம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் இருந்து பல் நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
- வந்தே பாரத் ரெயிலில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவிற்கான ஆப்சனை முன் அறிவிப்பின்றி ரெயில்வே நீக்கியதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் பகுதியில் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மட்டுமே அசைவ உணவு ஆப்சன் காட்டப்படுவதாக பயணிகள் புகார் கூறினர்..
இந்நிலையில், வந்தே பாரத் ரெயில்களில் காலை உணவில் அசைவ உணவு நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரெயில்களில் மூன்று வேளையும் அசைவ உணவு வழங்கப்படுவதாக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
- இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள்?
- மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? என்றார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை நம்பி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க யாரும் வருவதுபோல் தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி–னர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
புரணி பேசுவதற்கெல்லாம் கருத்து சொல்ல வேண்டுமா?
இதே ஆதவ் அர்ஜூனா தான் என்னை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். துணை முதல்-அமைச்சர் ஆக்குகிறேன் என்றார். அதற்கு என்ன செய்வது? என பதிலளித்தார்.
இதேபோல், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு குறித்த கேள்விக்கு, 'அதனால் என்ன நன்மை திரைத்துறைக்கு நடக்கும். ஒரே ஒரு நிறுவனம், குடும்பம்தான் மொத்த படத்தையும் வாங்கி வினியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கும் படம்தான் வெளியாகும். அந்தவகையில் இந்த கேளிக்கை வரி யாருக்காக குறைக்கிறார்கள். மின்கட்டணம், சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள்? அதற்கு பதில் இருக்கிறதா?' என சீமான் பதிலளித்தார்.
- தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
- தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு ரெயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரெயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே செய்ய ஏன் மாற்றப்பட்டது?" என்று நான் எழுப்பிய கேள்வியின் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிங்க் புத்தகம் சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும் எவ்வளவு ஒதுக்கீடு என்பதையே மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துவிட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்றாகிவிட்டது.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில் ரயில்வே வாரியம் 26. 9 .2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze )அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும் அதனை விடுவித்தால் தான் (டிஃப்ரீஸ் )பணம் செலவு செய்ய முடியும் என்றும் எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூபா 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்கவும் கோரி உள்ளார்.
ஈரோடு- பழனி புதிய பாதை திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்த முடியாதது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள்.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்கள்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான ஒதுக்கீடு ரூபாய் 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் தான் உள்ளன எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 200 கோடி 100 கோடி 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள்.
தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.!
- விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நேற்று கூறிய கருத்துக்குப் பிறகு. 'நீட் தேர்வு' மீண்டும் விவாத பொருளாக்கப்பட்டு இருக்கிறது.
விஜய் நீட் தேர்வு குறித்து சரியான கருத்தையே கூறி இருக்கிறார். தவறான கருத்தை எதையும் கூறவில்லை. ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அதில் மருத்துவர், பொறியியல், வேளாண்மை, சட்டம் என நான்கு துறைகள் முன்னிலை வகிக்கின்றன.
எனினும், இன்றைய காலகட்டங்களில் விண்வெளி ஆராய்ச்சி, கம்ப்யூட்டர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், வணிகவியல் தொழில் முனைவோர் என உள்நாடு, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அத்துறைகள் மருத்துவம், பொறியியல் துறைகளை விட நிறைவைத் தரக்கூடியதாகவும், அதிகப் பொருளீட்டக் கூடியதாகவும், புகழ் சேர்க்கக்கூடியதாகவும் உள்ளன.
பெரும்பாலான மாணயர்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களின் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிட்டு தாங்களே நீர்மானிக்கிறார்கள். பல நேரங்களில் பெற்றோரும். நண்பர்களும், ஆசிரியர்களும் வழிகாட்டிகனாக விளங்குகிறார்கள்.
எந்த மாணவரது வாழ்க்கையிலும் எந்த அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இதுனைரயும் சொல்லும் படியாக இருந்ததில்லை. பள்ளி அல்லது கல்லூரி பாடத் திட்டங்களையும் அந்த துறை நிபுணர்களே தீர்மானிக்கிறார்கள்.
அவ்வப்போது அசரியல் நோக்கங்களோடு அவர்களுக்கு பிடித்தமான தலைவர்களின் வாழ்ககை வாலாறுகளை பள்ளிப் பாடங்களில் திணிப்பதை தவிர அரசியல்வாதிகளுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது!
எனினும் அண்மைக் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு உருவான வாய்ப்புகளின் அடிப்படையில் "மத்திய அரசின் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவளர உருவாக்க வேண்டும்"என்ற உலக அளவிலான இலக்கை அடைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு தாராளம் காட்டியது.
அதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் புதிய புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினர். தமிழகத்தில் மிக மிக அதிகம்!!
தமிழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட பல மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசதிகள் இல்லாமலேயே தேசிய மருத்துவ கல்விக் கழகத்தின் நிபந்தனைகளை மீறி மாட்டுக்கொட்டைகளுக்கு குறைவான வசதிகள் கொண்ட கட்டிடங்களில் மருத்துவக் கல்லூரிகள் நடத்த அரசியல் பலத்தோடு அனுமதி பெற்றுக் கொண்டார்கள்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சேர பெரும் தொகை மட்டுமே அடிப்படை அம்சமாக இருந்தது. தமிழக அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் கூக்குரலிடுவதைப் போல கிராமப்புற, நகர்ப்புற, எழை, எளிய மாவாவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியின் வாசல்களை எட்டிப் பார்க்க முடியாத நிலை இருந்தது.
ஆனால் 50 சதவிகிதம் பெற்றிருந்தாலும் பணப்பெட்டியுடன் சென்றவர்களும், வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியின் பிள்ளைகளும் மருத்துவர்கள் ஆக முடிந்தது.
இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் எண்ணிக்கை அடிப்படையில் நிறைவேறியது; ஆனால் தரமான கல்வியைக் கொடுக்க முடியாத நிலை குறித்து அனைத்து தளங்களிலும் பேசுபொருளாகியது எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அனைத்திற்கும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தரம் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 'தேசிய அளவில்' மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தி அதன் பிறகு அகில இந்திய அளவில் தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. பல மாநிலங்கள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகமாக கொண்ட தமிழ்நாடு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டு.2017க்கு பிறகு தமிழகம் 'நீட் தேர்வை' அமலாக்கியது.
இந்த 7 வருடங்களில் ஆயிரக்கணக்கான கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றுத் தரத்தின் அடிப்படையில் எவ்வித நன்கொடையும் இன்றி மருத்துவராக முடிகிறது. ஆட்டோ டிரைவர், வேன் டிரைவர், கூலித் தொழிலாளி பிள்ளைகளும் மருத்துவராக சாதனை படைக்கிறார்கள் என்ற நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய அரசியல் சாசனம் வகுத்துத் தந்துள்ள உண்மையான 'சமத்துவம் சம உரிமை அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் சம வாய்ப்பு உரிமை நீட் தேர்வுக்கு பின்னர்தான் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில் "நீட் தேர்வு' இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு திறமையின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறது. அதன் அடிப்படையில் நாவரிசைப்படுத்துவது முழுக்க முழுக்க வெளிப்படையானதாகவே இருக்கிறது.
கடந்த காலங்களில் தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் முறையை கடைப்பிடிக்கக்கூடிய மாணவர்கள் தமிழகத்தைத் தாண்டி பிற மாநில மருத்துவக கல்லூரிகளிலும் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அதுவும் குறிப்பாக முதுநிலை வகுப்புகளில் தமிழக மாணவர்கள் பலரும் பிற மாநிலங்களில் பெரும் பங்கு வகித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு விளைந்துள்ள இந்த மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாத பிற்போக்கு அரசியல்வாதிகள் மிக மிகக் குறுகிய கண்ளேமாட்டத்துடன் திட் தேர்வு குறித்து தவறான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீட்டை ஒழிக்க வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்கள் ஆனால் அந்த நீட் ஒழிப்பு ரகசியத்தை வெளியே சொல்லாமலேயே தமிழக மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தில் சவாரி செய்து வருகிறார்கள்.
நீட் தேர்வு ஒழிப்பு குறித்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் தவறான வாக்குறுநியாலேயே மாணவச் செல்வங்கள் நங்களின் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் நீட் தேர்வு குறித்து உண்மையைப் பேசி இருந்தால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்து இருக்காது.
எவர் விட்டு பிள்ளையோ அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை அன்றைய தினம் அனுதாப செய்திகளையும் பத்து லட்சம் 'பணமுடிப்புகளையும் கொடுக்கிறார்கள். ஓட்டுக்களை அள்ளி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்கள். இந்த அநியாயம் நீண்டகாலம் நீடிக்காது, நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு +2 தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உன்ன 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம்.
எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறிச் செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும் அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள்!
தொடர்ந்து தமிழக மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும்.! விஜய் அவர்களின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும்.!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும்.
- அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார்.
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனா சிரித்துக் கொண்டே, பாஜகவே அதிமுக-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் பாஜகவும், திமுகவும் தங்கள் எதிரி என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதேவேளையில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை விஜய் வலியுறுத்தினார். ஆனால் அதிமுக-வை பெரிய அளவில் விமர்சிக்கவில்லை.
இதன்மூலம் விஜய் கூட்டணிக்கு தயாராக இருக்கிறார் என்பது தெளிவானது. அதிமுக- தவெக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிமுக ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை ஏற்கவில்லை. மேலும், விஜய் தரப்பில் துணை முதல்வர், தவெக தலைமையில்தான் கூட்டணி போன்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
அதிமுக-வின் ஒரே இலக்கு திமுக அரசை வீழ்த்துவதுதான் என்பதால், நம்முடன்தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என தவெக நினைத்தது.
இந்த நிலையில்தான் திடீரென அமித் ஷா, தமிழகம் வந்து, அதிமுக- பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனால் தவெக-வுக்கு தற்போது தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வருகிற மாதிரி தெரியவில்லை என கிண்டல் செய்யும் வகையில் ஆதவ் அர்ஜுன் கூறியுள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவு அளிக்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி விரிசல் ஏற்பட வாய்புள்ளதாக தெரியவில்லை.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்.
- ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ம
துரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்,"#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.






