என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது
    X

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது

    • எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில் இந்த மாதம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×