என் மலர்tooltip icon

    சென்னை

    • பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர்.
    • அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது.

    சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அளித்த தீர்ப்பில்,

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ந்தேதி அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது.
    • பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

    உலகில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சில லட்சம் பேருக்கு மட்டும் தான் அப்பழக்கம் உள்ளது. அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள்.

    அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம் ஆகும்.

    தேசிய அளவில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது. அதனால், பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இந்த சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    இந்த வரம்பை ஆண்டுக்கு ஒரு வயது வீதம் உயர்த்துவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டை புகைப்பிடிக்கும் வழக்கமில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.
    • நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!

    சென்னை :

    இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.

    நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! என்று கூறியுள்ளார். 

    • பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
    • வெள்ளி விலை நிலவரம்.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160

    28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-06-2025- ஒரு கிராம் ரூ.111

    31-05-2025- ஒரு கிராம் ரூ.111

    30-05-2025- ஒரு கிராம் ரூ.111

    29-05-2025- ஒரு கிராம் ரூ.111

    28-05-2025- ஒரு கிராம் ரூ.111

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
    • கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்தனர்.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என மாணவர்களின் பல உணர்வுகள் வெளிப்பட்டது.

    மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    இதனிடையே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன.
    • கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவௌியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகின்றன.

    அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். தங்கள் வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம்.

    ஏ.டி.எம்.களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை தாண்டி பணம் எடுக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன. புதிய கட்டணத்தை பெரும்பாலான வங்கிகள் கடந்த மே மாதம் அமல்படுத்தின.



    இந்தநிலையில், இந்தியன் வங்கி சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) பறந்தது. அதில், "ஜூலை 1-ந்தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் ஜி.எஸ்.டி.யும், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது ரூ.21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது. ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயரலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியதற்காக ஏ.டி.எம். உள்பரிமாற்ற கட்டணங்களை செலுத்தும். அதற்காகவே பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல சில தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிற வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மழலைப் பிஞ்சுகள் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர்.
    • இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.

    அதனால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான சூழல் அமையவில்லை. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக திரும்ப இருக்கின்றனர். அதிலும் மழலைப் பிஞ்சுகள் பள்ளி பருவத்தை தொடங்க உள்ளனர். அவர்களை உற்சாகமாக வரவேற்க ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றனர்.

    மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    • கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
    • ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.

    இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.

    இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    • மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
    • "மதராசி முகாம்" குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும்.

    டெல்லி ஜங்க்புரா பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது.

    மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. மதராஸி முகாமில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    "மதராசி முகாம்" என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரெயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசை பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    டெல்லி ஐகோர்ட்டு, "மதராசி முகாம்" என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம்/ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது.

    எனவே, டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரிய சட்டம் மற்றும் டெல்லி சேரி மற்றும் ஜேஜே குடியிருப்பு இடமாற்றக் கொள்கை, 2015ன் கீழ் தகுதியான குடியிருப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, குடியிருப்பாளர்களின் மறுவாழ்வு மற்றும் இடமாற்ற தகுதியை மதிப்பீடு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பு, தகுதி தீர்மானக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த செயல்முறை அடிப்படையில், 370 குடியிருப்பாளர்களில் 215 பேர் தகுதியுடையவர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியுடைய பயனாளர்களுக்குத் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கான (EWS) குடியிருப்பு யூனிட்டுகள், நரேலா, டெல்லியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

    மேலும், "மதராசி முகாம்" குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் தில்லி உயர்நீதிமன்றத்தால் 09.05.2025 தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின் படி, 01.06.2025 முதல் "மதராசி முகாம்" பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மதராசி முகாம்" பகுதியில் அனுமதியில்லாத கட்டிடங்களை இடிக்காமல் இருக்க குடியிருப்பாளர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, புதுடெல்லியில் உள்ள "தமிழ்நாடு இல்ல" அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, "மதராசி முகாம்" குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

    "மதராசி முகாம்" குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான்.
    • உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன்.

    மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு முன்னதாக, தனியார் விடுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், த.வெ.க. தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது, இருவரும் சகஜமாக பேசிக்கொண்டு வந்தனர். ஆதவ் அர்ஜுனா சிரித்துக்கொண்டே, பா.ஜ.க.வே அ.தி.மு.க.-வை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும். அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.

    என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.

    உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு…

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
    • தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி. க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட்டு தருவதாகக் கூறி தனது கடமையை செய்துள்ளது அ.தி.மு.க.

    * அனைத்து கட்சிகளிலும் அரசியல் என்பது தேர்தலை நோக்கிதான் செல்கிறது.

    * 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    * தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.

    * 2024 தேர்தலின்போது மாநிலங்களவை சீட் குறித்து எந்த வருடம் என குறிப்பிடாமல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    * அறிவிக்கும் இடத்தில் அ.தி.மு.க. உள்ளதால் அதன் கடமையை தற்போது செய்துள்ளது.

    * யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஜனவரி மாதம் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிக்கப்படும்.

    தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×