என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரிப்பு
- பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
- கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்தனர்.
சென்னை:
கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த சந்தோஷம், நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என மாணவர்களின் பல உணர்வுகள் வெளிப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இதனிடையே, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






