என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
- தென்மேற்கு வங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
- காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 22-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு குஜராத் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளது.
- ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாள் இன்று.
- வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.
வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
- ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது.
- எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி என்ற 3-வது அணி வலுவாக உருவானது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருந்தன. மேலும் இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அதோடு வெறும் 6.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மண்ணை கவ்வியது. அ.தி.மு.க. 136 இடங்களிலும், தி.மு.க. 98 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த கூட்டணியால் வெற்றி பெற வேண்டிய தி.மு.க தோல்வி அடைந்து, அது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தது என்று இன்றும் தேர்தல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த படுதோல்விக்கு பிறகு, மக்கள் நல கூட்டணி அடியோடு கலைக்கப்பட்டது. அதன்பின் தே.மு.தி.க. தவிர இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வருகின்றன. அதனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாராளுமன்ற, உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல் என அனைத்திலும் வெற்றி மகுடம் சூட்டி வருகிறது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாக இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த கூட்டணியை உடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டது.
ஆனால் பழக, பழக பாலும் புளிக்கும் என்பதுபோல இப்போது தி.மு.க. கூட்டணியிலும் திரைக்கு பின் இருந்த சலசலப்புகள் பொது வெளியில் வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம், தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகளை பொது வெளியில் வைத்து வருகிறார். தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கூட்டணி கட்சிகளால் தி.மு.க. வெற்றி பெறுகிறது என்றும் பகிரங்கமாக கூறினார். இது தி.மு.க.வுக்கு சற்று ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.
இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தான், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 2015-ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி தொடங்க அச்சாரமிட்டது. இப்போது, அதேபோல மீண்டும் மக்கள் நலக்கூட்டணி உருவாக அந்த கட்சி விரும்புகிறது என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கட்சி கூட்டணியில் இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து கொள்ளலாம். ஆனால் இதுவரை மவுனமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி பேச தொடங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மேலும் சிறிய கட்சிகளை பொறுத்தவரை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என்று எண்ணுகின்றனர். மேலும் அவர்கள் அதிகாரத்தை ருசிக்கிறார்கள். நமக்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகின்றனர். இது சராசரியாக ஒவ்வொரு கட்சியின் ஏக்கம் தானே? தேன் எடுப்பவன் அதனை ருசிக்க கூடாது என்றால் எப்படி? அதுபோலத்தான் இதுவும்.
எந்த கட்சியாக இருந்தாலும் அதிகாரம்தானே இலக்கு. அந்த அடிப்படையில்தான் மக்கள் நலக்கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். அதாவது ஆட்சியில் பங்கு என்று கோஷமிடும் திருமாவளவன், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குறை சொல்லும் கம்யூனிஸ்டு, கமல்ஹாசனுக்கு கொடுத்த மேல்சபை எம்.பி. சீட்டை வைகோவுக்கு கொடுத்து இருக்கலாமே என்று ஏக்கப்படும் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மீண்டும் ஒன்றிணைத்து மக்கள் நலக்கூட்டணி உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதில் இந்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகியவற்றையும் சேர்த்து, அதில் த.வெ.க. தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று கூறுகின்றனர். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதற்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? என்று விஜய் கட்சியில் இருக்கும் ஒரு முக்கிய பிரமுகர் சர்வே எடுத்துள்ளார்.
அதில் வெற்றி உறுதி என்ற தகவல் அவர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. எனவே இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் திரைக்கு பின்னால் பேசப்பட்டு வருகிறது. அதாவது கூட்டணி அமைத்து போட்டியிடலாம், வெற்றிக்கு பிறகு அதிகாரத்தையும் ருசிக்கலாம் என்று ஆசை வலை வீசப்படுகிறது.
மேலும், தி.முக., அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மீண்டும் சாத்தியமா? என்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே இதற்கான பதில்.
- பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர்.
- ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி, 'இந்த கடத்தல் வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யை குற்றவாளியாக சேர்த்து விட்டீர்களா?. ஏன் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக போலீஸ் துறை செயல்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் தரப்பில், பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தினால்தான் கூடுதல் டி.ஜி.பி.யின் பங்கு குறித்து தெரிய வரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கோர்ட்டில் ஆஜராகி இருந்த கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், எனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை என்றார். இதை ஏற்காத நீதிபதி, 'சிறுவன் கடத்தல் வழக்கில் போலீஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 2 போலீஸ் டிரைவர்கள் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளனர். எனவே, கூடுதல் டி.ஜி.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எம்.எல்.ஏ.வை அரசு நியமிப்பது இல்லை. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
ஆனால், பொது ஊழியரான கூடுதல் டி.ஜி.பி., பணி நிபந்தனைகளுடன் அரசால் நியமிக்கப்பட்டவர். அதனால், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும். இதன்மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும்? என்ற தகவல் பொது ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- தமிழகத்தில் வரும் 22-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். இதன்காரணமாக தமிழகத்தில் வரும் 22-ந்தேதி வரை மழை பெய்யக்கூடும்.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- "உலகமே பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று திராவிட மாடல் அரசு விளம்பரம் செய்வது அநியாயம்.
- ஜனங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்பட்டு, காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் திருப்பூர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளரே சிகிச்சை அளித்த அவலம் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையால் நிகழும் மரணங்கள் தொடர்கதையாகி, தற்போது வழக்கமான பெட்டி செய்தியாகிவிட்ட நிலையில், மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?
உயிரைப் பறிக்கும் மரணக் கூடங்களாகவும், புகார்களின் புகலிடமாகவும் அரசு மருத்துவமனைகளை மாற்றியமைத்து விட்டு "உலகமே பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு இது" என்று திராவிட மாடல் அரசு விளம்பரம் செய்வது அநியாயம்.
இது போன்ற நிகழ்வுகள் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் எதோ ஒரு எண்களைக் கூறி, "இதோ நியமனம், அதோ நியமனம்" என வார்த்தை ஜாலம் செய்வதைத் தவிர்த்து, ஜனங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றும் எண்ணத்தோடு செயல்பட்டு, காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை வலியுறுத்துகிறேன்.
"நாடு போற்றும் நல்லாட்சி" என்று பெருமிதம் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் மக்கள் நலனைக் காக்கும் அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர்," மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.
மக்களின் குறைகளை தீர்க்க, அரசு சேவைகளை பெற ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவி வழங்க முடிவு.
- அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் உத்தரவு.
தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
இந்நிலையில், டெல்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
- அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
- மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் மதிமுக அலுவலகம் உள்ளே நுழைந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில், மின் விசிறிகள் உடைந்தும், பொருட்களும் சேதமாகியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
மதிமுக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார்.
- முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.
தமிழக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!
அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்!
உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.!
'எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்" என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல!
'நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்' என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையாம். யார் சொல்லுவது பழனிசாமி? 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா?
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்களே… ஐந்தாண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை?
அதற்கு முந்தைய தேர்தலான 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று சொன்னார்களே… நிறைவேற்றினார்களா?
அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என்று கலர் கலராக எத்தனை மத்தாப்புகளைக் கொளுத்தினார்கள்? இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு.
கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம்.
இன்னொரு பக்கம் அடிமை பழனிசாமியின் அடிமைகள், 'பழனிசாமிதான் அடுத்த முதல்வர்' என மும்மாரி துதி பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை!
வாக்குச்சாவடியில்தான் முதல்வரை மக்கள் தேர்வு செய்வார்கள். அது நடக்காது என்பதால்தானோ, பழனிசாமியை முதல்வர் ஆக்கத் தியானம் செய்து சிறப்புப் பூஜையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகி இருந்திருந்தால்தான் பழனிசாமிக்கு மக்கள் நலன் மீது கவனம் இருந்திருக்கும். கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம் முழுக்க முழுக்க 'பெட்டி' மீதேதான் இருந்து வருகிறது.
மக்கள் குறைகளைத் தீர்ப்பதே முதன்மையான முழுநேரப் பணி என நாள்தோறும் பணியாற்றி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அடிமை சேவகம் செய்வதையே முழு நேரப் பணியாகச் செய்து வந்த பழனிசாமிக்கு மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!
பத்திரிகைகளைப் படிக்காமல், தொலைக்காட்சி செய்திகளை பார்க்காமல் வாட்ஸ்அப் தகவலை நம்பி அறிக்கை விடும் பழனிசாமிக்கு கோவம் மட்டும் டன் கணக்கில் வருகிறது. உங்கள் பொய்யை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதை எண்ணி பழனிசாமி அவமானப்பட வேண்டும்.
நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி ஆட்சி நடத்தியவர்தானே பழனிசாமி! உங்களைப் போல அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று ஆட்சி நடத்தாமல், மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டுச் சரிசெய்யும் முதலமைச்சராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல் இல்லாமல் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.
உட்கட்சி பிரச்னை, கூட்டணிப்பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வேம்படிதாளம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் (18-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இளம்பிள்ளை, சித்தர் கோவில், இடங்கணசாலை,
கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, ெபாதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு, தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.






