என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
- செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
சேலம்:
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
* செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
* சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர்.
* தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.
* 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம் என்றார்.
- எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
- போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும்.
சென்னை:
தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும்_ தமிழ்நாடுவெல்லும் என கூறியுள்ளார்.
- மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்!
- தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!
சென்னை:
தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
- ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
- அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
சேலம்:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* கிட்டத்தட்ட 6 மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானதாக இருந்தது.
* ஜெயலலிதா விசுவாசியாக இருந்தால் செங்கோட்டையன் ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
* நான் முதலமைச்சராக ஆன பின்னர் தான் செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானார்.
* ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
* ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
* குற்றவாளி சசிகலா, தப்பித்தது தமிழகம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.
* அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
* சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.
* அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
* அ.தி.மு.க.வின் சட்டவிதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா?
* அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
* அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
- எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
- அந்தியூர் தொகுதியில் துரோகம் செய்தவருக்கு எடப்பாடி பழனிசாமி பதவி அளித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.விற்கு வருவதற்கு முன்பே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான்.
* எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
* அடிப்படை விதிகளை மீறி, சர்வாதிகாரமாக என்னை நீக்கி இருக்கிறார் இ.பி.எஸ்.
* கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும்.
* அந்தியூர் தொகுதி தோல்விக்கு எனது துரோகம் காரணம் என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.
* அந்தியூர் தொகுதியில் துரோகம் செய்தவருக்கு எடப்பாடி பழனிசாமி பதவி அளித்தார்.
* துரோகம் செய்ததற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது இ.பி.எஸ்.க்கு கொடுக்கலாம்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க.விற்கு இ.பி.எஸ். துரோகம் செய்தவர்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.
* அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.
- இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க.வில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
* என்னை தி.மு.க.வின் பி டீம் என்றனர். நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. தி.மு.க.வின் ஏ டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.
* இ.பி.எஸ். தற்போது வரை அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் தான்.
* நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. இ.பி.எஸ். தான் ஏ1 ஆக இருக்கிறார்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க.விற்கு இ.பி.எஸ். துரோகம் செய்தவர்.
* ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.
* பொதுச்செயலாளராக இருந்த இ.பி.எஸ். தான் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி பேச வேண்டும்.
* இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
- எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.
- இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.
* இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.
* இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராமல் பணியாற்றினேன்.
* அ.தி.மு.க. உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் 2 முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
* தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.
* ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா.
* இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான்.
* பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ்.
* கட்சி ஒருங்கிணைய வேண்டும் என நாங்கள் 6 பேர் இணைந்து இ.பி.எஸ்.யிடம் பேசினோம்.
* வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று இ.பி.எஸ்.யிடம் பேசினேன்.
* கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது கருத்துக்களை எடுத்து வைத்தோம்.
* அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இருக்கிறது.
* தேவர் ஜெயந்திக்கு சென்றபோதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் பேசினேன்.
* தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதற்கான பரிசுதான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
- கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் வசித்து வந்தவர் பொறியாளர் பழனியப்பன். இவர் பா.ஜ.க. நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்குள்ள ஒரு கடையை மூர்த்தினி வயல் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சாந்தகுமாரின் நடவடிக்கையால் அவரை கடையை காலி செய்யுமாறு பழனியப்பன் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பழனியப்பனின் தாயார் அமுதா தன்னிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக சாந்தகுமார் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் பழனியப்பன் மீதான முன் விரோதத்தில் போலியான அவணங்களை தயாரித்து சாந்தகுமார் பொய் புகார் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து சாந்தகுமாரையும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் கணேசன் என்பவரையும் காரைக்குடி தெற்கு போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக கூலிப்படையை நாடி உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலிப்படையினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி பழனியப்பனை கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பழனியப்பன் உறவினர்கள் 2 நாட்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாந்தகுமார், அவரது நண்பர் கணேசன் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் நேற்று அழகப்பாபுரம் போலீசார் கைது செய்தனர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி வைகை பூர்வீக பாசன பகுதி 3ன் கீழ் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மறுநாள் 2000, அடுத்த நாள் 1500, 1000, நேற்று 222 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்திற்காக மட்டும் 1721 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1990 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 69.03 அடியாக உள்ளது. 5579 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் வைகை பூர்வீக பாசன பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 4 நாட்களுக்கு 2000 கனஅடியும், 5ம் நாள் 935 கனஅடியும் என மொத்தம் 5 நாட்களுக்கு 772 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.85 அடியாக உள்ளது. 1515 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1822 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 6584 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 160 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 7 கனஅடி நீர் வருகிற நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது.
- சுப்பிரமணிய சாமி மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது மருங்கூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள்.
- யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 54-ம் ஆண்டு பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் அனைத்து பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
4½ ஆண்டுகள் மக்களைப்பற்றி கவலைப்படாமல் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என மனுக்களைப் பெற்று வருகிறார். தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்களை ஏமாற்றினர். ரூ.1000 கொடுத்து விட்டு ரூ.5000 வரை மக்களிடம் இருந்து பறிக்கின்றனர். டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் போன்றவர்கள் வெளியே சென்று விட்டதால் அ.தி.மு.க. அழிந்து விட்டதாக பேசுகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க யாராலும் இயலாது. தன்னை வளர்த்த இயக்கத்தை மறந்து விட்டு செங்கோட்டையன் எதிர் முகாமிற்கு சென்றுள்ளார்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும்போது தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் அவர் சிக்கிக்கொண்டார். முதல் நாளிலேயே அவருக்கு இந்த நிலை என்றால் வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை கட்சியினர் அறிவார்கள். யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சகிகலா உதவியாளராக இருந்தார். டி.டி.வி.தினகரன் போன்ற அவரது குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அந்த சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. விரைவில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதியப்படுவது உறுதி.
சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் யாரை ஒருங்கிணைக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் சரண் அடைந்து விட்டனர். இவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து மக்களை சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி ஊரை ஏமாற்றுகின்றனர். இவர்கள் 4 பேருடன் வேறு யாராவது ஒன்று இரண்டு பேர் இருந்தால் அவர்களும் அ.தி.மு.க.வுக்கு வந்துவிடுவார்கள்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததால் அ.தி.மு.க.பற்றி தவறான கருத்துகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பரப்பி வருகின்றனர். தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் சேரும். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என்று பேசினார்.






