என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர்... வெற்றியே காணாதவர் இ.பி.எஸ். - செங்கோட்டையன் விமர்சனம்
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.
- இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாராட்டுகளை பெற்றவன்.
* இரவு, பகல் பாராமல் ஜெயலலிதா கைகாட்டிய திசையில் பயணித்தவன்.
* இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராமல் பணியாற்றினேன்.
* அ.தி.மு.க. உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் 2 முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
* தோல்வியே காணாதவர் எம்.ஜி.ஆர். இ.பி.எஸ். எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது.
* ஒரு முறை தோற்றால் மறுமுறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா.
* இ.பி.எஸ்.-க்கு பதவி கிடைப்பதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுத்தவன் நான்.
* பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இ.பி.எஸ்.
* கட்சி ஒருங்கிணைய வேண்டும் என நாங்கள் 6 பேர் இணைந்து இ.பி.எஸ்.யிடம் பேசினோம்.
* வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று இ.பி.எஸ்.யிடம் பேசினேன்.
* கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்களது கருத்துக்களை எடுத்து வைத்தோம்.
* அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்பது எனது நோக்கமாக இருக்கிறது.
* தேவர் ஜெயந்திக்கு சென்றபோதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் பேசினேன்.
* தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதற்கான பரிசுதான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.






