என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    துரோகம் செய்ததற்கான நோபல் பரிசை  இ.பி.எஸ்.க்கு கொடுக்கலாம் - செங்கோட்டையன் காட்டம்
    X

    துரோகம் செய்ததற்கான நோபல் பரிசை இ.பி.எஸ்.க்கு கொடுக்கலாம் - செங்கோட்டையன் காட்டம்

    • எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.
    • அந்தியூர் தொகுதியில் துரோகம் செய்தவருக்கு எடப்பாடி பழனிசாமி பதவி அளித்தார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் இருந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.விற்கு வருவதற்கு முன்பே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான்.

    * எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

    * அடிப்படை விதிகளை மீறி, சர்வாதிகாரமாக என்னை நீக்கி இருக்கிறார் இ.பி.எஸ்.

    * கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும்.

    * அந்தியூர் தொகுதி தோல்விக்கு எனது துரோகம் காரணம் என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.

    * அந்தியூர் தொகுதியில் துரோகம் செய்தவருக்கு எடப்பாடி பழனிசாமி பதவி அளித்தார்.

    * துரோகம் செய்ததற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது இ.பி.எஸ்.க்கு கொடுக்கலாம்.

    * ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க.விற்கு இ.பி.எஸ். துரோகம் செய்தவர்.

    * ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர் இ.பி.எஸ்.

    * அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×