என் மலர்
ராஜஸ்தான்
- கும்பமேளா நல்ல விசயம்தான். கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவரும், பாராளுமன்ற எம்.பி.யுமான பரூக் அப்துல்லா ராஜஸ்தான் மாநிலம அஜ்மீர் சென்றுள்ளார்.
அவரிடம் கும்பமேளா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ரித்தி என்ற புலி மற்றும் அதன் குட்டிகள் ஏரியை கடந்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு மற்றும் பல்வேறு உயிரினங்கள் கொண்ட இந்த பூங்கா வன விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த பூங்காவின் முக்கிய அடையாளமாக பெங்கால் புலிகள் திகழ்கிறது. அங்கு சுற்றுலா சென்ற அகமதாபாத்தை சேர்ந்த சந்தீப் என்ற என்ஜினீயர் புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரித்தி என்ற புலியும், அதன் குட்டிகளும் பூங்காவின் 3-வது மண்டல பகுதியில் உள்ள ராஜ்பாக் ஏரியை நீந்தி கடந்து மறுகரைக்கு செல்லும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.
- தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்
24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.
கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது
- கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டிவந்த கார் சீக்கிய வழிபாட்டு ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜா பார்க் பகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் பஞ்சவடி வட்டம் அருகே கோவிந்த் மார்க் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறிய போதிலும், ஒரு முதியவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த சீக்கியர் கூட்டம் ஒன்று விபத்து ஏற்படுத்திய கார் மீது தாக்குதல் நடத்தியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் கார் பானட்டின் மீது ஏறி அதை தடியால் தாக்குவதும், கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
அரசு அதிகாரி ஒருவரின் மைனர் மகன் கார் ஒட்டி வர அவனுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். விபத்தின் பின் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதர்ஷ் நகர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.=

அதிகாரியின் மைனர் மகன் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. காரின் கண்ணாடியில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர், அது சரிபார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
- ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தீத்வானா மாவட்டத்தில் உள்ள குச்சமன் நகர் பகுதியை சேர்ந்த அனில் சிங் என்பவரது மின்சார கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதானது. இதனால் அவரால் அங்கிருந்து காரை ஓட்டி செல்ல முடியவில்லை. அதோடு நடுரோட்டில் கார் பழுதாகி நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் நிலவியது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த காளை வண்டியில் இருந்து பழுதான காருக்கு கயிறு கட்டி இழுத்து சென்றுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மின்சார வாகனத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கார் உரிமையாளரான அனில் சிங் மெட்டியா கூறுகையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மின்சார காரை வாங்கினேன். ஆனால் ஒரு வருடத்திற்குள் 16 முறை பழுதாகி சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த சரியான பதிலையும் வழங்கவில்லை என விரக்தியுடன் கூறினார்.
- பெண் குழந்தை எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 150 அடி ஆழத்தில் சிக்கியது.
- ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 170 அடி ஆழத்தில் சிக்கியது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வந்தனர்.
டெல்லில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே 12 அடி வரை சுரங்கம் தோண்டப்பட்டு குழந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மீட்பு குழுவினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை 10வது நாளான இன்று மீட்டனர்.
கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் குழந்தையை மீட்டனர்.
பின்னர் அங்கு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிறுது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
- ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள்.
- முதல் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை சீமா பெற்றுள்ளார்.
- விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார்
கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார்.
பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார்.
இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் அவர் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார் என்றும் வெவ்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.
- தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
- நாளை ஐதராபாத்தில் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ஜோத்வாராவில் வசிக்கும் பிரபல நகைக்கடை அதிபர் தனக்கு மணப்பெண் தேடினார். இதற்காக ஆன்லைன் மூலம் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ஒரு பெண் அவருக்கு அறிமுகமானார். அவர் தன்னை சீமா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சீமாவின் உறவினர்கள் என்று சிலரும் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர் அந்த பெண்ணின் ஊரான டோராடூனுக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு இருந்த சீமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுபற்றி நகைக்கடை அதிபர் அங்குள்ள முரளிபுரா போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலைய அதிகாரி சுனில் குமார் ஜாங்கிட், சப்-இன்ஸ்பெக்டர் வசுந்தரா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டேராடூன் சென்று சீமா அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நிக்கி என்ற சீமா அகர்வால் என்பதும் அவர் ஆன்லைன் திருமண தளங்கள் மூலமாக சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களின் முழுமையான தகவல்களை பெற்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு 3, 4 மாதங்களில் அவர்களின் நம்பிக்கையை பெற்று பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களுடன் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கனவே இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை சீமா திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து அந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதேபோன்று 2017-ம் ஆண்டு குருகிராமில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து அவர் மீதும் அவரது உறவினர் மீது கற்பழிப்பு புகார் கூறி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.1.21 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான இளம்பெண் சீமா வேறு யாரையும் இதுபோன்று மோசடி செய்துள்ளாரா? அவரது மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 8 முறை பல்டி அடித்து ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது.
- காரில் பயணம் செய்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் நடைபெற்ற விபத்தில் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக தப்பித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவருடன் ஐந்து பேர் இருந்தனர். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவர் காரை திருப்ப முயன்றுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் சுமார் 8 முறை பல்டியடித்தவாறு, சாலையின் அருகில் உள்ள ஷோரூம் கேட்டில் பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.
ஷோ ரூமில் உள்ளவர்கள் காரில் பயணம் செய்தவர்களுக்க என்ன ஆனதோ? என பதறியடித்து கரை நோக்கி ஓடி வந்தனர்.
அப்போது டிரைவர் காரில் இருந்து குதித்து வெளியேறினார். அதன்பின் ஒவ்வொருவராக காரில் இருந்து வெளியில் வந்தனர். காரில் இருந்து வெளியில் வந்த ஐந்து பேருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.
பயங்கரமான விபத்து நடைபெற்றும் காரில் பயணம் செய்தவர்களுக்கு சிறு காயம் கூட ஏற்படாததை ஷோரூம் பணியாளர்கள் வினோதமாக பார்த்தனர்.
அதை விட வினோதம் என்ன வென்றால், காரில் இருந்து வெளியில் வந்தவர்கள் விபத்தை பற்றி அலட்டிக்கொள்ளலாம், ப்ளீஸ் ஒரு கப் டீ கிடைக்குமா? என்று கேட்டதுதான்.
- பாப் கார்ன் தயாரித்து உப்பு, மசாலா சேர்த்து அப்படியே சாப்பிடக் கொடுத்தால் அதற்கு 5 சதவீதம் வரி.
- 1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்த பரிந்துரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 55-வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட முக்கியம்சங்கள்:-
* பாப் கார்ன் தயாரித்து உப்பு, மசாலா சேர்த்து எந்தவிதமான எழுத்தும் இல்லாத கவரில் வைத்துகொடுப்பதற்கு (not pre-packaged) 5 சதவீதம் வரி. பாக்கெட்டில் வைத்து பெயர் பொறிக்கப்பட்டால் (Labelled) 12 சதவீதம். caramel popcorn-க்கு 18 சதவீதம் வரி விதிக்க பரிந்துரை.
* 1000 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட துணிகளுக்கான வரியை உயர்த்த பரிந்துரை. தற்போது 5 சதவீதமாக இருக்கும் நிலையில், 12 சதவீதமாக உயர்ந்த பரிந்துரை.
* 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை
* 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான சைக்கிளிலுக்கான வரி 12 சதவீதமாக உள்ள நிலையில், அதை 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை.
* ஆர்டர் செய்து வாங்கப்படும் உணவுகளுக்கு வாங்கப்படும் சர்வீஸ் சார்ஜ் மீதான வரியை குறைப்பதற்கான ஆலோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
* 15 ஆயிரும் ரூபாய்க்கு அதிமான விலை கொண்ட ஷூக்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்த பரிந்துரை






