ஓட்டலில் பில் கொடுக்கும்போது மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரை விட்ட இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ

உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார்
ஓட்டலில் பில் கொடுக்கும்போது மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரை விட்ட இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ
Published on

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர் 27 வயதான சச்சின். கடந்த சனிக்கிழமை அன்று இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.

ஓட்டல் ஊழியர் அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.

இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

சச்சின் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. சமீப காலங்களாக இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com