என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milkman"

    புதுச்சேரி:

    ஆரோவில் போலீஸ் நிலையத்தில் பால் விற்பனை டீலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டம் சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 52) இவர் கடலூர் மாவட்டம் வடலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தனியார் பால் பண்ணை மூலம் பால் வாங்கி திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வானூர் இரும்பை கிளியனூர் ஆரோவில் பகுதியில் விற்பனை செய்து வந்தார்.

    அதற்காக வடலூர் பால் கம்பெனி உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்தியுள்ளார்.

    சம்பந்தப்பட்ட கம்பெனியின் பால் சரியில்லை என வாடிக்கையாளர்கள் சுப்புராயனிடம் புகார் தெரிவிக்கவே அங்கு பால் வாங்க சுப்புராயன் தவிர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பால் விற்பனையில் ஆர்வம் கொண்ட சுப்பராயன் கடந்த 2 நாட்களாக வேறு ஒரு கம்பெனி மூலம் பாலை கொள்முதல் செய்து திருச்சிற்றம்பலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பாலை விநியோகம் செய்து வந்துள்ளார்.

    இதனை அறிந்த பழைய பால் கம்பெனி உரிமையாளர் இன்று காலை சுப்பராயனுக்கு போன் செய்து மிரட்டி உள்ளார் மேலும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு வந்து சுப்பராயனின் பால் ஏற்றி வந்த வாகனத்தை கடத்தியுள்ளனர்.

    மேலும் பால் வாகனத்தில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பாலை சாலையில் கொட்டி உள்ளனர். இதனை தட்டி கேட்ட சுப்பராயனை அந்த கும்பல் தாக்கியுள்ளது.

    இதுகுறித்து சுப்பராயன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பெட்ரோல் கேன் உடன் இன்று காலை சுப்புராயன் ஆரோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது.
    • பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பால்காரர் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது சாலையை கடக்க வேகமாக ஓடிவந்த சிறுத்தை அவர்மீது மோதியதில் பால்காரர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பால் அனைத்தும் தரையில் கொட்டி வீணானது.

    வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.

    சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த இருவர் சாலையில் காயமடைந்த கிடந்த பால்காரரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார். #ManBooker #AnnaBurns
    லண்டன்:

    வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார்.
     
    உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”.  இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி, ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்பட பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.



    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த புத்தக்கத்தில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

    அன்னா பர்ன்ஸ் பெற்றுள்ளது 50-வது மேன் புக்கர் பரிசு என்பது குறிப்பிடத்தக்கது. #ManBooker #AnnaBurns
    ×