என் மலர்tooltip icon

    டெல்லி

    • காலிறுதி போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.
    • அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.

    இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

    காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்:

    ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா

    பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்

    சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்

    டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்

    முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.

    காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.

    • இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?
    • போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

    மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி அரசாங்கம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    அவையில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "எதிர்க்கட்சித் தலைவர்களை பேச அனுமதிக்கக் கூடாது என்று மோடி அரசாங்கம் முடிவு செய்துவிட்டது. மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி, இருவரையும் பேச அனுமதிப்பதில்லை."

    "இந்த நாட்டிற்காக தியாகம் செய்த, இந்த நாட்டிற்காக போராடிய, சிறை சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய நமது மாபெரும் தலைவர்களுக்கு எதிராக, ஒரு மனிதர் அவையில் பேசுகிறார். அவருக்கு மைக் கொடுக்கப்படுகிறது, அவர் அந்த மைக்கில் இஷ்டம்போல் அவதூறுகளை பொழிகிறார், அரசாங்கமோ மௌனமாக இருக்கிறது. இதை பாஜக எப்போதாவது கண்டித்திருக்கிறதா?"

    "அதனால்தான், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், எங்களை பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, நமது தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை, நாங்கள் கண்டிக்கிறோம்," என்றார்.

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மீது பரஸ்பரவரியை விதித்த டிரம்ப், பின்னர் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் அந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதனால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், வர்த்தக பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை உண்டானது.

    இதனால் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் டிரம்ப் பேசி வந்தார். ஆனால், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்தநிலையில் இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவை டிரம்ப் மிரட்ட முடியாது என்று அமெரிக்க அமைச்சரிடம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். மேலும் இந்தியாவுக்கு மிரட்டல்களை தொடர்ந்து விடுத்தார். அந்த சமயத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    இரு நாடுகள் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை அஜித்தோவல் சந்தித்து பேசினார்.

    அப்போது, வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப் அல்லது அவரது மூத்த உதவியாளர்கள் இந்தியாவை மிரட்ட முடியாது என்றும் கடந்த காலத்தில் கடினமான அமெரிக்க நிர்வாகங்களை இந்தியா கையாண்டிருக்கிறது என்றும் மார்கோ ரூபியோவிடம் அஜித்தோவல் தெரிவித்தார்.

    மேலும், தேவைப்பட்டால் வர்த்தக ஒப்பந்தத்திற்காக டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை இந்தியா காத்திருக்க தயாராக இருப்பதாகவும் அஜித்தோவல் தெரிவித்தார்.

    அதன்பிறகு செப்டம்பர் 16-ந்தேதி பிரதமர் மோடியிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டது.
    • முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க்கப்படவில்லை.

    கடந்த ஜனவரி 28 தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

    இதற்கிடையே கூட்டத்தொடர் தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றைய மக்களவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

    பிரதமர் நரேந்திர மோடியின் உரை இல்லாமலேயே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டு அவை நிறைவுற்றது.

    இன்று சபை தொடங்கிய பிறகு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

    முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்காததால் பிரதமர் மோடி பேச இருக்கும்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

    • உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைகளுக்காக சண்டை போடுவது, கவர்ச்சியாக உடை அணிந்து செல்வது, இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. ஆனால் தற்போது வைரலாகும் வீடியோவில், டெல்லி மெட்ரோவின் ரோகிணி கிழக்கு ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களுக்கு பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், 3 பெரிய கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட இந்த எந்திரத்தில் பல்வேறு அளவுகளில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மின்னணு திரை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைப்பார்த்த பெண் ஒருவர் ஆச்சரியத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோ வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. நெட்டிசன்கள் சிலர், அவசரத் தேவைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இக்கட்டான காலங்களில் இது போன்ற எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பதிவிட்டுள்ளனர். சில பயனர்கள், மெட்ரோ பயணத்தின்போது உள்ளாடைகளை வாங்குவது என்பது சற்று வினோதமான முயற்சி என்று பதிவிட்டுள்ளனர்.



    • மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர்.
    • 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் முதல் 27-ந்தேதி வரை 807 பேர் மாயமாகி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்களை தேடி வந்தனர். இதில் 235 பேரை கண்டுபிடித்துள்ளனர். 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 27 பேர் காணாமல் போய் உள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போனவர்களில் தினமும் 9 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

    27 நாட்களில் 191 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். அவர்களில் 48 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளனர். 137 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்படாதவர்களில் 120 பேர் சிறுமிகள் ஆவர்.

    பெரியவர்களில் 616 பேர் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்களில் 90 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் என 181 பேரை போலீசார் மீட்டுள்ளனர். 435 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

    மாயமான குழந்தைகளில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 9 பேர் ஆவர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டு இதே வயதுள்ள குழந்தைகள் 368 பேர் மாயமானார்கள். அவர்களில் 149 பேர் மீட்கப்பட்டனர். 219 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில், கடந்த மாதம் 13 குழந்தைகள் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 3 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 12 முதல் 18 வயதுடைய இளம் பருவத்தினர் 169 பேர் கடந்த மாதம் மாயமானார்கள். அவர்களில் 48 பேர் கண்டுபிடிக்கப்பட்ட னர். 121 பேரை இன்னும் காணவில்லை.

    டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இன்னும் பலர் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 5,559 குழந்தைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 695 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 60 ஆயிரத்து 694 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 53,763 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 6,931 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சுமார் 11 சதவீதம் ஆகும்.

    காணாமல் போனவர்கள் பற்றி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளில் 12 வயது முதல் 18 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம், அதன் மூலம் ஆபத்தில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    • நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
    • இந்தப் பிரச்சனை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.

    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:

    இடதுசாரி பயங்கரவாதம் அல்லது இந்தியாவில் பொதுவாகக் குறிப்பிடப்படும் நக்சல் பிரச்சனை 1968-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது. இதுகுறித்த தேசியக் கொள்கை இல்லாததால் இது பல தசாப்தங்களாக நீடித்து வந்தது.

    2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா நக்சலிசத்தில் இருந்து விடுபடும்.

    கடந்த 2018-ம் ஆண்டு பயங்கரவாதத்தால் 126 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2025 டிசம்பரில் அவை 8 மாவட்டங்களாகக் குறைந்துள்ளன.

    பிரதமர் மோடி அரசின் பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை மற்றும் தலைமையின் கீழ் நக்சலிசம் விரைவில் ஒழிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு மம்தா நன்றி தெரிவித்தார்
    • பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

    அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

    பெயர்களை நீக்கியதற்கு எதிரான மாநில அரசின் ஆதாரங்களை தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

    SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மம்தா பானர்ஜி மனு மீது 2 நாட்களில் பதிலளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. .

    இதனையடுத்து தன்னை வாதிட அனுமதித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மம்தா மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டுகோள் விடுத்தார்.

    • உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    • SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுனார்.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

    அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

    SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
    • புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இது குறித்து பேசும் போது, "பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வர துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அவர் வந்தால், நான் இந்த புத்தகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன். பிரதமர் வந்தால், நான் நேரில் சென்று இந்த புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன், அதனால் அவர் அதை படித்து, இந்த நாடு உண்மையை அறிந்துகொள்ள முடியும்."

    "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இந்த புத்தகம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது திரு. நரவணேவின் புத்தகம். அவர் இந்த புத்தகத்தில் லடாக் பற்றிய முழு விவரங்களையும் கொடுத்துள்ளார். இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டக்கூடாது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது."

    "முக்கிய விஷயம் என்னவென்றால், பிரதமர் சொன்னதுதான் - "எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்". (முன்னாள்) ராணுவ தளபதி ஜெனரல் நரவணே, ராஜ்நாத் சிங்கை அழைத்து, சீன டாங்கிகள் கைலாஷ் ரிட்ஜூக்கு வந்துவிட்டன, அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கேட்டார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை."

    "பின்னர் அவர் மீண்டும் ராஜ்நாத் சிங்கை அழைத்தார். ராஜ்நாத் சிங், தான் 'உயர்மட்டத்திடம்' கேட்பதாக கூறினார். 'உயர்மட்டத்தின்' நிரந்தர உத்தரவு என்னவென்றால், சீனப் படைகள் உள்ளே வந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது சுடக்கூடாது என்பதுதான். நரவணேவும் நமது ராணுவமும் அந்த டாங்கிகள் மீது சுட விரும்பின, ஏனென்றால் அவை நமது எல்லைக்குள் நுழைந்துவிட்டன."

    "நரேந்திர மோடி "எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்" என்று ஒரு செய்தியை அனுப்பினார். இதன் பொருள், நரேந்திர மோடி தனது கடமைகளை செய்யவில்லை; "இது என் சக்திக்கு அப்பாற்பட்டது" என்று கூறி, ராணுவ தளபதியை அவர் விரும்பியதை செய்யச் சொன்னார். 'நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன், முழு அரசமைப்பாலும் நான் கைவிடப்பட்டேன்' என்று நரவணே எழுதுகிறார்," என ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.
    • இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    சட்டசபை தேர்தலின் போது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

    இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.

    மேலும் அவர், தகுதியான பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என்றும், குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர் என்றும் கூறினார்.

    இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    ×