நீதி மறுக்கப்பட்டுள்ளது: SIR வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கிய மம்தா பானர்ஜி

உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுனார்.
நீதி மறுக்கப்பட்டுள்ளது: SIR வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கிய மம்தா பானர்ஜி
Published on

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம் சாட்டியுனார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் SIR வழக்கில் மம்தா பேனர்ஜி வழக்கறிஞராக ஆஜராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் SIR வழக்கில் ஆஜரான மம்தா பேனர்ஜி தனது வாதங்களை தொடங்கியுள்ளார்.

அப்போது "SIR விவகாரத்தில் பல வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டாலும் எங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதம் அனுப்பினோம், எந்த பதிலும் இல்லை என மேற்குவங்கம் தரப்பு வாதத்தை மம்தா எடுத்துவைத்தார்.

SIR விவகாரத்தில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது, எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com