என் மலர்
பீகார்
- தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
- புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் 13 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்துள்ளது.
இது பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் இடிந்து விழுந்த 4 ஆவது பாலமாகும். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர்.
அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
அங்குள்ள சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ தயாரித்து கொண்டிருந்தார். மொட்டை மாடியில் நின்று அவர் மழையில் நனைந்தவாறு நடனமாடி வீடியோ எடுத்த போது அவரது அருகில் மின்னல் தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் மழையில் ரீல்ஸ் தயாரிப்பது ஆபத்தில் முடிந்துவிடும் என பதிவிட்டு வருகின்றனர்.
Reels nahi rukni chahiye.??
— NITESH (@Nitesh805181) June 26, 2024
?Sitamarhi, Bihar#LighteningStrike #Thunder ⚡?️ pic.twitter.com/9b1i9YDzNo
- சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.
- அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர்.
யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.
அப்போது காசியாதீக் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். பிறகு வாகனத்தில் இருந்த அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த நபரின் குடும்பத்தார் அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவித்தனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டுபிடித்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
- நீட் தேர்வுக்கான கேள்விகள் வெளியானது பீகார் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
- கைது செய்யப்பட்ட மாணவர்கள் வேதியியல் பாடத்தில் மிகவும் குறைந்த சதவீதம் எடுத்துள்ளான்.
நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தேர்வு நாளைக்கு முந்தைய தினம் வெளியான குற்றச்சாட்டிலா், நீட் தேர்வு எழுதிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். பீகார் மாநில போலீசாரின் விசாரணையில் அந்த மாணவன் தேர்வுக்கு முந்தைய நாள் வினாக்களை பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளான்.
அந்த மாணவன் இயற்பியல் பாடத்தில் 85 சதவீத (percentile) மதிப்பெண் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 51 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் வேதியியல் பாடத்தில் 5 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்.
விசாரணையில் கைது செய்யப்பட்டுன் அனுராக் கூறியதாவது:-
ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். எனது மாமா சிகந்தர் சமாஸ்திபுருக்கு திரும்பி வரச் சொன்னார். மேலும், தேர்வை பார்த்துக் கொள்ளலாம் என உறுதி அளித்தார். தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் சில வினாக்கள் மற்றும் அதற்கான பதில்கள் கிடைத்தன. அடுத்த நாள் தேர்வில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன.
வேதியியல் பாடத்தில் 5 சதவீத மதிப்பெண் எடுப்பதற்கு காரணம், முந்தைய நாள் வினாக்கள் கிடைத்ததால், மனப்பாடம் செய்யும் அளவிற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனுராக் ஓபிசி இடஒதுக்கீட்டில் 4,67,824 இடத்தை பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 10,51,525 இடத்தை பிடித்துள்ளார்.
இன்னும் 3 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பேரும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் ஒருவர் 720-க்கும் 300 மதிப்பெண் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 87.8 சதவீதம் எடுத்துள்ளார். ஆனால் இயற்பியல் பாடத்தில் 15.5 சதவீதம், வேதியியல் பாடத்தில் 15.3 சதவீதம் எடுத்துள்ளார்.
- பீகாரில் இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
- பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாட்னா:
இந்தியாவிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டசபையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், பீகாரில் அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உயர்வு தொடர்பான வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை பாட்னா ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டது.
அப்போது, சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், அரசமைப்பின் அதிகார வரம்பு மற்றும் சமத்துவத்தை மீறுவதாக தலைமை நீதிபதி கே வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- 7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை
- பாலம் இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜய்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
- இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் என்றார்.
பாட்னா:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.
பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெறமுடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெறமுடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர்.
- எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள ஒரு கும்பல் பல பெண்களை அடைத்து வைத்து மாதக்கணக்கில் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் இந்த பெண்களை குறிவைத்த அந்த கும்பல் தங்களின் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி வரவழைத்து அவர்களை அடைத்து வைத்து இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து தப்பித்த ஒரு பெண் நேராக சென்று காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அடைத்துவைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற போலீசார் பெண்களை மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட அந்த குமபல் அங்கிருந்து கம்பி நீட்டிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இடதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. அவர்களில் ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டு வேலை தருவதாக உறுதியளித்த அந்த கும்பலை நம்பி சென்றபோது, என்னை ஒரு அறையில் காத்திருக்க சொன்னார்கள்.
அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர். பின்னர் எங்களை வேறொரு இடத்துக்கு கூட்டிச் சென்ற அவர்கள், மேலும் பல பெண்களிடம் போன் செய்து அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக சொல்லக் சொன்னார்கள். இப்படியாக பல பெண்கள் சேர்ந்ததும் எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அதனால் உருவான எங்களின் கருவையும் கலைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.
- ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
- 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
சித்தாமர்ஹி என்ற தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவேஷ் சந்திர தாகூர் வெற்றி பெற்றார். இவர் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அர்ஜூன் ராய் வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி செய்ய மாட்டேன் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவேஷ் சந்திர தாகூர் பேசியதாக வெளியான வீடியோவில் "முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயானத்தினர் இங்கு வர விரும்பினால் அவர்களால் வர முடியும். வந்து டீ குடித்து, ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். பின்னர் சென்று விடலாம். ஆனால் எந்வொரு உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமான அம்புவில் (arrow) நரேந்திர மோடி படத்தை பார்க்கும்போது, நான் ஏன் அரிக்கேன் லைட் (ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னம்) மற்றும் லாலு யாதவின் முகத்தை உங்களிடம் பார்க்கக் கூடாது?" என்பது போல் பேசியுள்ளார்.
மேலும் தன்னிடம் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முன்னதாக உதவி கேட்டு வந்தபோது, நடந்த விசயத்தை அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக கூறுகையில் "ஒரு வேலைக்காக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் என்னிடம் வந்தார். முதன்முறையாக என்னிடம் வந்துள்ளதால் நான் அதிகமாக பேசமாட்டேன் என்று அவரிடம் தெளிவாக கூறினேன். மற்றபடி நான் எளிதில் விடமாட்டேன்.
நான் அவரிடம் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வாக்கு அளித்தீர்களா? என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். அவரிடம் டீ அருந்திவிட்டு கிளம்பும்படி சொல்லிவிட்டேன். உங்களுடைய வேலையை நான் செய்யமாட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்ததாக கூறினார்.
- விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
- மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
- இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது.
- மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது.
- பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்.
நேற்று பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்கி பேசினார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சி அப்போது விற்கப்படவில்லை.
ஒரு மாநில முதல்வர் என்பது அம்மாநில மக்களின் பெருமை. ஆனால், மோடியின் பாதங்களைத் தொட்டதால் பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்தினார்.
நிதிஷ்குமாரின் கட்சி மக்களவை தேர்தலில் 12 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் தவித்த பாஜகவின் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக உருவெடுத்தது.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்? பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை.
2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதீஷ் குமார் வணங்கியதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.






