என் மலர்tooltip icon

    பீகார்

    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஐ.ஏ.எஸ். அதிகாரி, ‘ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்’ என்று பதற்றத்துடன் கூறினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜே.பி. கங்கா பாதை திட்டத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதி பணிகள் முடிந்ததைத்தொடர்ந்து, அந்த சாலைகளை அர்பணிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, ரவிசங்கர் பிரசாத் எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, 'மாநிலத்தின் நலனுக்காக சாலைப்பணிகளை விரைந்து முடியுங்கள். நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில்கூட விழுகிறேன்' என்று கூறியபடி அங்கிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நோக்கி நெருங்கினார் நிதிஷ்குமார்.

    இதனால் மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, பல சில அடிகள் பின்வாங்கி, 'ஐயா தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்' என்று பதற்றத்துடன் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பலம் குறைந்த முதல்-மந்திரியால் இதைத்தான் செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


    • மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.
    • நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன.

    அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் சி.பி.ஐ. ஏற்கனவே 9 பேரை கைது செய்துள்ளது. அவர்களில் ஐார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் நகரில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளிக்கூடத்தின் முதல்வர், துணை முதல்வர் ஆகிய 2 பேரும் அடங்குவர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். நாலந்தாவை சேர்ந்த நீட் தேர்வு மாணவரான சன்னி மற்றும் கயாவை சேர்ந்த மற்றொரு மாணவரான ரஞ்சித் குமார் என்பவரின் தந்தை ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.

    இதன்மூலம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் லாலு பிரசாத்.

    பாட்னா:

    ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இன்று கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்தோம். நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.

    கட்சியின் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டிருப்பதால் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையதாகும். எம்.எல்.ஏ. வேட்பாளர்களை மாற்றுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன்.

    அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே கட்சி தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்து விடும் என தெரிவித்தார்.

    • புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
    • குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும்.

    பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசும் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொறியாளர்களின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு பலனளிக்காததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சைதன்ய பிரசாத், பொறியாளர்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    முன்னதாக, பீகாரின் சரண் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 17 நாட்களில் இதுபோன்ற சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இச்சம்பவங்கள் குறித்து பேசிய ஊரகப் பணித் துறை (ஆர்டபிள்யூடி) செயலர் தீபக் சிங், "அராரியாவில் பக்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் ஜூன் 18ஆம் தேதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநில மற்றும் மத்திய குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

    • பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
    • பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வருவதை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 

    அதில், "பா.ஜ.க கூட்டணியில் ஊழல் ஆட்சியில், பீகார் மாநிலத்தில், கடந்த 15 நாட்களில் 9 பாலங்களில் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, இன்று (03.07.24) மட்டும், 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை 18 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொல்ல வேண்டும். ஆனால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    ஆனால், 6 கட்சிகள் அடங்கிய இரட்டை இயந்திர ஆட்சிக்கு 15 நாட்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பாலங்கள் இடிந்து விழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளை குறை சொல்ல எந்த சாக்குபோக்கும் கிடைக்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.
    • கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் உள்ள வார்டு எண். 12ன் கவுன்சிலர் ஆவார்.

    கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

    இதனால் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.

    அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.

    இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.


    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார். 

    • 2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.

    18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.

    22-ந் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

    23-ந் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.

    26-ந் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

    2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் அரசை கடுமையாக சாடினார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், ''நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் விளைவாக மாநிலத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    • ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
    • இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின்  தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×