என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூண்கள்"
- ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
- இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.
ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
- டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
- மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை (20.6 கி.மீ.) திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிக்கல்களால் அந்த பணி முடங்கியது.
இதைத் தொடர்ந்து தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. இதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம்- மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் மொத்தம் 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த தூண்கள் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டது குறித்து சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் சென்னை துறைமுகம்- மதுர வாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வர உள்ளன. மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கி உள்ளனர்.
சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்து உள்ளது. மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளன. அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது.
துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்றனர்.
- பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
- இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.
இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.
இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.
இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.
பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்