என் மலர்
நீங்கள் தேடியது "Ruin"
- நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
- அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.
தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
- 100-க்கும் மேற்பட்ட சாக்குகள், படுதாக்கள் எரிந்து நாசமாகின.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் அரசு நெல் குடோன் செயல்பட்டு வருகிறது.
இங்கு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் வாங்கி அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது ஏராள மான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென குடோனில் இருந்து புகை கிளம்பி கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சென்று பார்த்தபோது தீ மளமளவன பற்றி எரிந்து கொண்டிருந்தது. சாக்குகள், படுதாக்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோ பிரசன்னா உத்திரவு படி நிலைய சிறப்பு அலுவலர் பொய்யாமொழி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் 100-க்கும் மேற்பட்ட சாக்குகள் ,படுதாக்கள் எரிந்து சேதம் ஆகின. நெல்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்காக கெமிக்கல்வைக்க ப்பட்டிருக்கும்.
அதில் தண்ணீர் பட்டு தீவிபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.