குஜராத்: லன்ச் பீரியடில் இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்.. அலறிய மாணவர்கள் - வீடியோ

மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.
குஜராத்: லன்ச் பீரியடில் இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்.. அலறிய மாணவர்கள் - வீடியோ
Published on

குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com