அதிர்ச்சியில் பீகார்.. கடந்த 9 நாட்களில் இடிந்து விழுந்த 5 வது பாலம் - வீடியோ

ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.
அதிர்ச்சியில் பீகார்.. கடந்த 9 நாட்களில்  இடிந்து விழுந்த  5 வது பாலம் - வீடியோ
Published on

பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின்  தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com