என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  2 காட்டு யானைகள் அட்டகாசம் வாழைத் தோட்டம் நாசம்
  X

  யானைகள் புகுந்து நாசப்படுத்திய வாழை தோட்டங்களை சதாசிவம் எம்.எல்.ஏ. பார்வையிட்ட போது எடுத்த படம்.

  2 காட்டு யானைகள் அட்டகாசம் வாழைத் தோட்டம் நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
  • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

  தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  Next Story
  ×