search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janata Dal"

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

    ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து தேர்தல் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, "தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்," என்று தெரிவித்தார். எச்.டி. குமாரசாமி மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    "தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. அவர்களை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா, உறுதியான இந்தியா' என்ற நோக்கத்தை வலுப்படுத்தும்," என்று ஜெ.பி. நட்டா தெரிவித்து உள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.எ. தெரிவித்துள்ளார். #CongressMLA #LaxmiHebbalkar
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்- அமைச்சராக உள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கேட்டு 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி செய்வதாக முதல்வர் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., தன்னிடம் பா.ஜனதாவினர் ரூ.30 கோடி பேரம் பேசினர் என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். நான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால் ரூ.30 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

    பா.ஜனதா தலைவர் பேசிய போன் அழைப்பை பதிவு செய்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பினேன். என்னிடம் நடத்திய பேரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

    பா.ஜனதாவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காங்கிரசை விட்டு விலக மாட்டேன். ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியை வெளிக்கொண்டு வரவே பேரம் பேசிய விவரத்தை வெளியில் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #CongressMLA #LaxmiHebbalkar
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel #BharatBandh
    புதுடெல்லி:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 
     
    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்த நிலையில் நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் அதிகரித்து பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.83.66 ஆகவும், 11 காசுகள் அதிகரித்து டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.76.75 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா இன்று மாலை தெரிவித்துள்ளார். #devegowda #petroldiesel  #BharatBandh 
    உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் இழுபறி நிலை உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட வேண்டிய நிலை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நகர உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தொடரும். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.

    இதனால் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களின் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராகும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஜமீர்அகமதுகான், சிவானந்தபட்டீல், கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.

    இது தொடர்பாக நேற்று அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார்.



    அந்த அறிக்கையில் அவர், ‘‘இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அவர்களில் சிலரிடம் நான் பேசி உள்ளேன்’’ என கூறி உள்ளார்.

    மேலும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டு மக்களை காக்கவும் தேவையான முக்கிய விவகாரங்களை விவாதிப்பதற்கு இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என சரத் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சரத் யாதவ் இதற்கு முன் கூட்டிய இத்தகைய கூட்டங்களில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 82 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 51 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகளும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். #KarnatakaElection2018 #KumarasamyformingGovernment
    கர்நாடக மாநிலத்தில் அமையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். #Kumaraswamywins
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா, ராமநகரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இந்நிலையில், ராமநகரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் பாஷா என்பவரைவிட கூடுதலாக 22 ஆயிரத்து 636 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். சன்னப்பட்னா தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் யோகேஸ்வாராவை விட சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். எனவே, இந்த தொகுதியிலும் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. #Karnatakelection #karnatakaverdict #Kumaraswamywins
    ×