பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் - மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கோரிக்கை

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் -  மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கோரிக்கை
Published on

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை என்று மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும். மாநிலக் கட்சிகள் எந்த நிலைப்பாடு எடுத்தாலும் கவலையில்லை. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இதன்மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு அழுத்தம் தருவது எங்கள் நோக்கமல்ல" என்று அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com