என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாளில் இடிந்து விழுந்த 2 பாலங்கள் -  பீகாரில் கடந்த 15 நாட்களில் இது 7-வது சம்பவம்
    X

    ஒரே நாளில் இடிந்து விழுந்த 2 பாலங்கள் - பீகாரில் கடந்த 15 நாட்களில் இது 7-வது சம்பவம்

    • பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×