search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gangs"

    • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை. வைத்தியநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் பாபு (47). இவர் வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரும்பு சப்ளை செய்த கடைகளில் இரவில் பணம் வசூல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் பிரகாஷ் பாபு நேற்று இரவு மண்ணடி பகுதியில் உள்ள இரும்பு கடைகளில் மொத்தம் ரூ.8 லட்சம் பணத்தை வசூல் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    மழை பெய்து கொண்டு இருந்ததால் அவர் கடற்கரைசாலையோரம் உள்ள ஒரு கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார். அப்போது அருகில் நின்ற வாலிபர் ஒருவர் பணப்பை மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் ஒன்றை கொடுத்தார். அதனை பணம் இருந்த பை மீது சுற்றி வைத்துக்கொண்டு பிரகாஷ் பாபு சிறிது நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரகாஷ்பாபு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய பிரகாஷ் பாபு மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். உடனே மர்ம நபர்களில் ஒருவன் அவரிடம் இருந்த ரூ.8 லட்சம் பணப்பைபை பறித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்பாபு கத்தி கூச்சலிட்டதும் மர்ம கும்பல் கத்தியால் அவரை தாக்கினர். இதில் பிரகாஷ் பாபுவின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் மர்ம கும்பல் ரூ.8 லட்சத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த பிரகாஷ்பாபு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவரது வலது கையில் 7 தையல் போடப்பட்டுள்ளது

    இதுகுறித்து பிரகாஷ்பாபு போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரகாஷ்பாபு பணம் வசூலித்து வருவதை அறிந்து மர்ம நபர்கள் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவரை நீண்ட நாட்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சவுந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.

    நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்', தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி 2' போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து 'கேங்க்ஸ்' என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.


    நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். 'கேங்க்ஸ்' வெப்தொடரின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சவுந்தர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதில், "2010-ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தை தயாரித்தேன். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.


    • சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
    • நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திரு மலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட் டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீ சார், இவர்களது கூட்டா ளியை தேடி வருகின்றனர்.

    • கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • 2 பேர் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான மாதப்பூர், அருகம்பாளையம், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள இரும்பு கதவுகள் திருடப்பட்டு வந்தன.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினரான சி.பி.கே செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கணியூர் மேட்டுக்காட்டில் தான் நடத்தி வரும் கடையில் இருந்து இரும்புகளை மர்மநபர்கள் திருடி சென்றதாக புகார் கொடுத்தார்.தொடர்ந்து புகார்கள் வரவே இரும்புகளை திருடும் மர்மநபர்களை பிடிக்க கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. தையல்நாயகி உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் திருடு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 பேர் முகம் பதிவாகி இருந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பதை தேடினர். அப்போது அவர்கள் மாதப்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் அரசூர் கொள்ளு பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான குமார்(45), டிரைவர் மகேந்திரன்(25) என்பது தெரியவந்தது.மேலும், இவர்கள் தான், தங்களது நண்பரான சரவணன்(35) என்பவருடன் சேர்ந்து கருமத்தம்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் உள்ள இரும்பு கதவுகளை திருடியதும் தெரியவந்தது.

    இதுதவிர கருமத்தம்பட்டியில் பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த இடத்தில் கிடந்த இரும்பு கம்பியையும் இந்த கும்பல் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்களிடம் இரும்பு கதவுகளை எங்கே என்று விசாரித்த போது, கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்றதாக தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று, இரும்புகளை மீட்டனர்.

    பின்னர் மகேந்திரன், குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சரவணனை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் இவர்களிடம் இரும்புகளை வாங்கிய கடை உரிமையாளரிடமும் விசாரணை நடக்கிறது.

    • ஜன்னல் ஓரமாக ராகுலின் சட்டை இருந்தது அதை கீழே கம்பியால் சட்டையை லாவகமாக எடுத்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பூந்தோட்ட பகுதியில் நாராயணன் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 30) இவர் நேற்று சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அப்போது வீட்டின் ஓரமாக ஜன்னல் கதவு திறந்தபடி இருந்தது. பின்னர் அங்கு சென்ற மர்ம நபர் திறந்த ஜன்னல் ஓரமாக ராகுலின் சட்டை இருந்தது அதை கீழே கம்பியால் சட்டையை லாவகமாக எடுத்தனர். பின்னர் அந்த சட்டையில் இருந்த வாட்ச் மற்றும் 8000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இன்று வீட்டுக்கு திரும்பிய ராகுல் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாதுரியமாக திருடி சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோன்று விழுப்புரம் மணி நகர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கு சென்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். வீட்டில் உரிமையாளர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை போனதை அறிந்தார் .இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.

    ×