search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muzaffarpur"

    சிறுமிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா கோர்ட்டில் சரண் அடைந்தார். #Muzaffarpur #BiharMinister #ManjuVerma #Surrender
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.

    இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சுதிர்குமார் ஓஜா என்ற வக்கீல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.#Rahul Gandhi
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சுதிர்குமார் ஓஜா என்ற வக்கீல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், “ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு பேசுகையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் பெருகியதற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததுதான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

    இதுபோன்று இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார். எனவே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறி உள்ளார். இந்த மனு வருகிற செப்டம்பர் 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு ஹரி பிரசாத் அறிவித்தார்.   #Rahul Gandhi
    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர். #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்ப்பூர் பகுதியில் இயங்கிவந்த சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் விளைவாக அந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

    இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். அதன்படி, பீகார் மாநில முதல்மந்திரியின் கோரிக்கைப் படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.



    இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து தங்களது விசாரணையை துவக்கினர். காப்பகத்தின் சீல் வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு முழுமையான சோதனை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்த சி.பி.ஐ விசாரணையை பாட்னா உயர்நீதிமன்றம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MuzaffarpurShelterHome #Bihar #CBI
    ×