search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "filed"

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #PollachiAbuseCase #HighCourt
    சென்னை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வ்ரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. #PollachiAbuseCase #HighCourt
    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சுதிர்குமார் ஓஜா என்ற வக்கீல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.#Rahul Gandhi
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், சுதிர்குமார் ஓஜா என்ற வக்கீல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், “ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு பேசுகையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் பெருகியதற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததுதான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

    இதுபோன்று இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார். எனவே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறி உள்ளார். இந்த மனு வருகிற செப்டம்பர் 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு ஹரி பிரசாத் அறிவித்தார்.   #Rahul Gandhi
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் பாணசுர சாகர் என்ற திட்டத்தின் கீழ் வரக்கூடிய குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று சீராய்வு மனுவை கேரளா அரசு மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தங்கள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நேற்று விசாரித்தனர். ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதுதவிர அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது, மில்லர்புரத்தில் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டது.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பு கலவரத்தில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 4 ஆயிரம் பேர், வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாக சிவில் சப்ளை அதிகாரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் 1000 பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    ×