என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

    பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தங்குமிடத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

    சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
    • இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    நீக்கப்பட்ட 97.37 லட்சம் பெயர்களில், உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

    அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ந்தேதி நிறைவடைந்தது.

    வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

    மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுவார்.

    • பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.
    • இந்த ஆண்டு இறுதியில் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

    பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (மொத்தம் 79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர், இந்த ஆண்டு இறுதியில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர், தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார். பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடியுள்ளார் நெய்மர்.

    இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன். ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படிதான் நடக்கும். இந்த ஆண்டு மிக முக்கியமானது. சந்தோஷ் கிளப்பிற்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும். உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டு என்பதால் எனக்கும் முக்கியமானது. இந்த சீசனில் 100 சதவீதம் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    • அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என கண்டித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.
    • இந்த புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கியது
    • தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

    நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று (21-ம் தேதி) தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கனமழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும்

    • இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா?
    • இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது.

    திருச்சி மாநில மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

    தனித்துவத்தோடு இருக்கிறோம்.. தனித்து உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம்.

    வியாபாரம் தேவையில்லை. வேண்டியது அரசியல் விடுதலைதான். மொழி அழிந்தால் நாடு அழியும்.

    இது ரசிகர் கூட்டம் அல்ல. லட்சியக் கூட்டம். திரைக் கவர்ச்சியா? இன எழுச்சியா?

    பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்துக்காக நிற்கிறோம். நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம்.

    அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்.

    இங்கே அரசியல் என்பது தேர்தலுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கான அரசியல் இல்லை.

    இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது. ஆனால் சேவை அரசியல், செயல் அரசியல் இல்லை.

    ஐந்தாயிரத்தை வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை அறிவுச் சமூகம் அறியணும்.

    இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது"

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

    தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு IED வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராய்யா புறக்காவல் நிலையம் அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பையில் IED வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

    வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.

    அதேபோல ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபபோரா பகுதியில் மற்றொரு IED கண்டறியப்பட்டது. ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அதை செயலிழக்கச் செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்தில் வட காஷ்மீரில் கண்டெடுக்கப்படும் மூன்றாவது IED இதுவாகும். இதற்கு முன் பாரமுல்லா மற்றும் டாங்மார்க் சாலைகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

    முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த  தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 

    • சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
    • இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், 'அரசன்' படத்தில் இருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,

    அப்படி ஒண்ணும் கிடையாது. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. யாரு பரப்புறதுன்னு தெரியல. இதையெல்லாம் நம்பாதீர்கள் என்றார். 

    • கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
    • முதன்மைக் கண்காணிப்பாளர்களாக ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள்.

    சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக N.ஆனந்த், கழகப் பொதுச்செயலாளர், K.A செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர், கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • இன்று உலகத் தாய்மொழிகள் நாள்!
    • நம் தமிழைக் காத்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழே நீ வாழ்ந்திடு!

    இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

    நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது

    உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவடைந்தது

    நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குரூப் ஏ பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று நினைக்கிறேன்.

    இந்திய அணியின் போட்டிகளை பார்க்கும் போது அனைத்து போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கின்றனர். சூப்பர் 8ல் அழுத்தம் அதிகமாக இருக்கும் என அவர் கூறினார்.

    • சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்
    • நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலனை.

    புதுடெல்லி:

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் ரொக்கப்பணம், பாஸ்டேக் போன்ற முறையில் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்துவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது.

    இதன்படி இனிமேல், பயணிகள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரும் என தெரிகிறது.

    ×