என் மலர்
நீங்கள் தேடியது "பாஸ்டேக்"
- நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
- பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு, இந்த சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இந்த ரொக்க நடைமுறையால் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதில் வாகனங்கள் கால தாமதத்தை சந்தித்து வந்தன.
இதனைத் தவிர்க்க 'பாஸ்டேக்' கட்டண முறை கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்கள் வெகுநேரம் காத்து நிற்காமல் வேகமாக சென்று வருகின்றன. 'பாஸ்டேக்' நடைமுறைப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டாலும் இன்னும் அது முழுமையாகவில்லை. பல வாகனங்கள் இன்னும் ரொக்கமாகவே பணத்தை செலுத்துகின்றன.
எனவே பாஸ்டேக் நடைமுறையை முழுமையாக்கவும், ரொக்க நடைமுறையை தவிர்த்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த திருத்தத்தின் படி, பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் யு.பி.ஐ. மூலம் செலுத்தினால் கூடுதலாக கால்பங்கு கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும்.
உதாரணமாக, 100 ரூபாய் கட்டணம் என்றால், ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு அது ரூ.200 ஆகும். யு.பி.ஐ.யில் செலுத்துபவர்களுக்கு ரூ.125-ஆக கட்டணம் இருக்கும்.
இந்த புதிய கட்டண நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்மூலம், பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் வருடாந்திர 'பாஸ்' வைத்திருந்தால் அதிக பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிக எண்ணிக்கையில் வருடாந்திர பாஸ் வாங்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
- சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தனியார் வாகனங்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்டேக் பாஸ் திட்டம் கடந்த 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியை ஓராண்டு அல்லது 200 முறை கடந்து செல்ல முடியும்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த பயண அட்டையை பெறுவதற்காக பதிவு செய்துகொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் வருடாந்திர பாஸ் வாங்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, அரியானா மாநிலங்கள் உள்ளன. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி மாலை 7 மணி நிலவரப்படி 1.4 லட்சம் பயனாளர்கள் இந்த வருடாந்திர பாஸை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக் வருடாந்திர பாஸை வாங்கி செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ தளமான ராஜ்மார்க்யாத்ரா செயலி கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ள அரசு செயலியாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 23-வது இடத்திலும், பயணப் பிரிவில் 2-வது இடத்திலும் உள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு 4.5 நட்சத்திர மதிப்பீட்டை இந்த செயலி பெற்றுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரவுகளின்படி ஒரே நேரத்தில் சுமார் 20,000 முதல் 25,000 பேர் வரை ராஜ்மார்க்யாத்ரா செயலியை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் தடையின்றி பயணிக்கலாம்.
- பல நேரங்களில் கட்டணத்தை செலுத்தாமல் சுங்கச்சாவடியின் மாற்று பாதைகள் வழியாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
- பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை ஆணையம் உருவாக்கி உள்ளது.
புதுடெல்லி:
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் 'பாஸ்டேக்' எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்மூலம் சில நொடிகளில் சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகின்றன. இந்த 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும். ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் தனியாக தங்கள் கைவசம் வாகனங்களில் வைத்துக்கொள்கின்றனர். இவ்வாறு பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள், பல நேரங்களில் கட்டணத்தை செலுத்தாமல் சுங்கச்சாவடியின் மாற்று பாதைகள் வழியாக செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
சுங்கச்சாவடி பணியாளர்களிடம் சிக்கும்போது, வாகனங்களில் தாங்கள் கைவசம் வைத்திருக்கும் ஸ்டிக்கரை காண்பித்து சுங்க கட்டணத்தை செலுத்துகின்றனர்.
இதன்காரணமாக, வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படாத பாஸ்டேக் ஸ்டிக்கர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை ஆணையம் உருவாக்கி உள்ளது. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்கள் குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம், இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உடனுக்குடன் புகார் அளிக்க ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த புகார் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை நிரந்தர தடுப்பு பட்டியலில் கொண்டுவந்து அதுபோன்ற வாகனங்கள் முகப்பு கண்ணாடியில் பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை சுங்கச்சாவடிகளில் தடையற்ற பயணத்துக்கு மேலும் உதவியாக இருக்கும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
- வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- ரூ.3000 கட்டணம் செலுத்தினால் நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம். இந்த பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு வருடாந்திர FASTag பாஸ் ரூ.3,000 என்பதை ரூ.1,500-ஆக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இது கூடுதல் தொகையாகும். இந்த ரூ.3,000 கட்டணத்தை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு நடைமுறைப்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளார்.
- நெடுஞ்சாலைகளில் பயணிக்க வருடாந்திர பாஸ் முறை அறிமுகப்படுத்தவுள்ளது.
- இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.3000 கட்டணம் செலுத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டு முழுவதும் அல்லது 200 பயணங்கள் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த வருடாந்திர பாஸ் முறை ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் இந்த பாஸ் முறை கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
- நெடுஞ்சாலைகளில் பயணிக்க வருடாந்திர பாஸ் முறை அறிமுகப்படுத்தவுள்ளது.
- வாழ்நாள் FASTag திட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை பயணங்களை எளிதாக்க பாஸ்டேக் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருடாந்திர பாஸ் முறை: வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இந்த "வருடாந்திர பாஸ்" முறையில் இந்தியா முழுவதும் பயணிக்க FASTag ரீசார்ஜ்கள் தேவையில்லை.
பயணிக்கும் தூர அடிப்படையிலான விலை நிர்ணயம்: 100 கி.மீ.க்கு 50 ரூபாய் என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும். இது அடிக்கடி பயணம் செய்யாதவர்களுக்கு ஏற்றது.
வாழ்நாள் FASTag திட்டம் நீக்கம்: 30,000 ரூபாய் கட்டணம் செலுத்தி 15 ஆண்டுகளுக்கு பயணிக்கும் வாழ்நாள் FASTag திட்டத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில் சுங்க கட்டணம் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, பாஸ்டேக் வாயிலான வருவாய் ரூ.50,855 கோடியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் அந்த வருவாய் ரூ.34,778 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாஸ்டேக் வாயிலான பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் ரூ.219 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் ரூ.324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டு மொத்தமாக 6.4 கோடி பாஸ்டேக் வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் 922-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 1,181-ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 323 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரு மடங்குக் கட்டணம் தொடா்பான அறிவிப்பை சுங்கச் சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும்.
- ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை காரின் முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது.
புதுடெல்லி:
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட்ட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் 'பாஸ்டேக்' ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம்.
பல வாகன ஓட்டிகள் காருக்குள் 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்கும்போது மட்டும் அதைக் கையில் எடுத்து முன்பக்கக் கண்ணாடியில் காட்டுகின்றனா். இதனால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு மடங்குக் கட்டணம் தொடா்பான அறிவிப்பை சுங்கச் சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும்.
'பாஸ்டேக்' ஸ்டிக்கரை காரின் முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி ஏற்கனவே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
- சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் பாஸ்டேக் விதிமுறைகளில் மத்திய அரசு அமைப்பான இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இவை நாளை(பிப்ரவரி 17) முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்யவில்லை என்றால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். மேலும் அத்தைகைய வாகனத்திற்கு சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
எனவே பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் பயனர் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.






