search icon
என் மலர்tooltip icon
    • வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும்.
    • இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகாலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உடல் வலிமையை கூட்டுவதை போல, மன வலிமையையும் அதிகரிக்கச் செய்யும் வில்வித்தை போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஒலிம்பிக் அசோசியேசன், தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடை க்கானல் ஆகிய 5 இடங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பயிற்சியாளரும், நடுவர் சங்க தலைவருமான சீத்தாராமன், உதவி பயிற்சியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் இந்த பயிற்சியை அளித்து வருகின்றனர்.

    வில்வித்தை போட்டி என்பது கண், மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஒருசேர வலிமை சேர்க்கும் பயிற்சி ஆகும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பார்வைதிறன் அதிகரிப்பது டன், சிந்திக்கும் திறனும் கூடும்.

    திண்டுக்கல் விளையாட்டு அரங்கில் 4 முதல் 45 வயதுடைய அனைத்து தரப்பினருக்கும் வில்வித்தை பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் பெற்றோர்களே முன்வந்து தங்கள் பிள்ளை களை இந்த பயிற்சிக்கு அழைத்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் பயிற்சி மேற்கொண்டு உலக கோப்பை, வில்வித்தை தகுதி போட்டிக்கு தேர்வுபெற்ற மாணவர்கள் தனுஷ்கந்தன், அன்புராஜ், கோபிநாத், ஹனுஸ் ஆகியோர் விளையாட்டு கோட்டாவில் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் தற்போது வில்வித்தை போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு மாவட்டத்தில் சிறந்த பயிற்சி அளிக்கப்படு கிறது.

    தேசிய போட்டிகளில் பங்குபெற இந்தியன் வில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரீர்கொவ், காம்பவுண்டு ஆகிய வில் பயிற்சிகள் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் சிந்தனையை ஒருமுக ப்படுத்தி தனித்திறமையை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.

    டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே மாலையகவுண்டன் பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

    அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் டாக்டர் வினோத் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட பூச்சியாளர் துறை அலுவலர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், இளநிலை பூச்சியாளர் விஜயா, சுகாதார ஆய்வாளர் மாரிவேல், ஆசிரியர் பொன்ராம் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
    • இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

    பழனி:

    கொடைக்கானல் வனக்கோட்டம், பழனி வனச்சரகத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பழங்குடியினர் வசிக்கும் இடங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம வனக்குழு மக்களை தேர்வு செய்து அந்தந்த கிராமங்களில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வனப்பகுதியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பேணி காப்பது, தீயிலிருந்து வனத்தை காப்பாற்றுவது, வேட்டைகளில் இருந்து வன உயிரினங்களை காப்பாற்றுவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பழனி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் மற்றும் பிரேம்நாத், ஜெயசீலன், வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர். இது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்ற இரண்டு வாரங்கள் நடைபெற உள்ளது.

    மேலும் காற்று மாசினை தடுக்கும் விதமாக தேக்கந்தோட்டம் வன சோதனை சாவடியிலிருந்து வருகிற ஜூன் 20-ந் தேதி காலை 7 மணிக்கு மிதிவண்டி வைத்திருப்போர் பழனி வாழ் மக்கள் ஒன்றிணைந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நெகிழிகளை அகற்ற ஒன்று சேருமாறு பழனி வனச்சரத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    கம்பம் 29-வது வார்டு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த குமார் மனைவி மகேஷ்வரி (வயது 65). கணவர் இறந்து விட்ட நிலையில் தனது மகள் விஜயலட்சுமி பராமரிப்பில் இருந்து வந்தார். மகேஸ்வரி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் பார்த்து வந்தார்.

    மூட்டு வலியால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதைகளை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.
    • உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உத்தம பாளையம் கோட்டா ட்சியர் தலைமையில் இலவம் பஞ்சு விலை நிர்ணயம் தொட ர்பான முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த இலவம் பஞ்சு வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் 90 சதவிகிதம் இலவம் பஞ்சு தேனி மாவட்டத்தில் உற்ப த்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 2000 லோடு பஞ்சு உற்பத்தி செய்து வியாபாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலவம்பஞ்சு சராசரியாக ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது. இதனால் இலவம்ப ஞ்சு விவசாயி களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அதிக அளவில் வருவாய் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் வியாபாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து பஞ்சு விலையை ரூ.60க்கும் கீழ் குறைத்து நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.80 வரை இலவம் பஞ்சு விற்பனை ஆகிறது. பஞ்சு விலை குறைவிற்கு உள்ளூர் வியாபாரிகளே முக்கிய காரணமாக உள்ளனர். எனவே இலவம் பஞ்சு விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு கிலோ ரூ.100 என அரசு விலை நிர்ணயம் செய்து காதி கிராப்ட் மூலம் விவசாயிகளிடம் கொ ள்முதல் செய்யவேண்டும்.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் பஞ்சு இருப்பு வைக்க வசதியாக குடோன்கள் கட்டிக் கொடுக்க வேண்டும், உள்ளூர் வியாபாரிகளை அழைத்து அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கீழ் பஞ்சு கொள்முதல் செய்ய க்கூடாது என வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்களை விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அடுத்த கூட்ட த்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிறுத்தப்பட்ட பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.
    • வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மதுரை, தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயராமல் உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது லோயர்கேம்ப் அருகே குருவனூற்று பாலம் வண்ணாந்துறை பகுதியில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த பணிகடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.05 அடியாக உள்ளது. 205 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.07 அடியாக உள்ளது. 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி யில் பகுதிநேர ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கார்டு வைத்திருந்தவர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரேசன் கார்டுகளை எவ்வாறு தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் உரிய பதில் அளிக்கா விட்டால் யாருக்கும் ரேசன் பொருட்களை வழங்க விட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

    பெரியகுளம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய வீரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
    • பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காணப்படுகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பஸ்நிலை யத்திலிருந்து மதுரை, திருச்சி, திருப்பூர் ஆகிய முக்கிய பெரும் தொழில் மாநகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மாவட்டங்களை இணை க்கும் முக்கிய பால மாக திண்டுக்கல் பஸ்நிலையம் திகழ்ந்து வருகிறது.

    இங்கிருந்து தேனி, மதுரை, திருச்சி, காரைக்குடி ஆகிய பல்வேறு பகுதி களுக்கு நாள்தோறும் ஆயிர க்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். வேலைக்கு செல்வோர் விவசாயிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் என பலதர ப்பட்ட மக்கள் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூடுகின்ற னர்.

    மேலும் தற்போது சீசன் காலம் என்பதால் மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வட மாவட்டங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் வந்து செல்கின்றனர். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கரூர், சேலம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள நடைபாதை சேதமடைந்து பொதுமக்க ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் சிமெண்ட் கற்கள் உடைந்து பெயர்ந்து காண ப்படுகிறது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சேதமடைந்த கற்களால் அடிபட்டு ரத்தக்காயம் ஏற்படுகிறது.

    இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நத்தம்:

    நத்தம் அருகே குட்டுப்பட்டி பெரியமலையூர் பள்ளத்துக்காடை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35). இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் விவசாய தோப்பில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மெய்குரு(36) என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.
    • பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.

    இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கவுகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம், லோனா வாலா, தெலுங்கானா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கூடை பந்தாட்ட வீரர்களை கொண்ட 24 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியுடன், உடுமலைப்பேட்டை கூடை பந்தாட்ட கழக அணி மோதியதில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் போடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நெல்லை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் போடி அணி 76க்கு 58 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3வதாக நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணியுடன், சில்வர் ஜூப்ளி கிரீன் அணி மோதியதில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணி 101க்கு 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    மேலும் சென்னை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக அணிக்கும், கம்பம் பெனிக்குவிக் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக அணி 91க்கு 31 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    ×