என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue awareness meeting"

    டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே மாலையகவுண்டன் பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் கணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

    அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார அலுவலர் டாக்டர் வினோத் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட பூச்சியாளர் துறை அலுவலர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தாளாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், இளநிலை பூச்சியாளர் விஜயா, சுகாதார ஆய்வாளர் மாரிவேல், ஆசிரியர் பொன்ராம் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன், சுகாதார அலுவலர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட மலேரியா அலுவலர் வரதராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு பவுடர் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதனை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் செக்கானூரணி வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி, நகராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், காசி பாண்டி, ரம்ஜான் பேகம் ஜாகீர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×