search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடைப்பந்தாட்ட போட்டிகள்"

    • 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
    • லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    நாக்அவுட் முறையிலான போட்டிகளில் முடிவு பெற்று நேற்று முதல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    2-ம் நாள் லீக் சுற்று போட்டியில் முதலில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கும் இந்திய விமானப்படை புதுடில்லி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பல் படை லோனாவாலா அணி 98க்கு 91 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதனைத் தொடர்ந்து 2-வதாக லீக் சுற்று போட்டியில் கஸ்டம்ஸ் புனே அணிக்கும், பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 77க்கு 74 என்ற புள்ளிகள் அடிப்படையில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    மேலும் லீக் சுற்று முறையில் நடைபெறும் போட்டியில் அதிக வெற்றிகளை பெறும் 2 அணிகள் நாளை இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது.

    • நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.
    • பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 62ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 21ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகின்றது.

    இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கவுகாத்தி, ஹைதராபாத், புனே, கொச்சின், சென்னை, புதுடெல்லி, பெங்களூர், திருவனந்தபுரம், லோனா வாலா, தெலுங்கானா, வாரணாசி, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து கூடை பந்தாட்ட வீரர்களை கொண்ட 24 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை முதலாவதாக நடைபெற்ற போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியுடன், உடுமலைப்பேட்டை கூடை பந்தாட்ட கழக அணி மோதியதில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 67க்கு 48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் போடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நெல்லை ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் போடி அணி 76க்கு 58 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 3வதாக நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணியுடன், சில்வர் ஜூப்ளி கிரீன் அணி மோதியதில் திண்டுக்கல் கூடை பந்தாட்ட கழக அணி 101க்கு 27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    மேலும் சென்னை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக அணிக்கும், கம்பம் பெனிக்குவிக் கூடை பந்தாட்ட கழக அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக அணி 91க்கு 31 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

    ×