search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Peoples protest today by ration shop"

    • நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டி யில் பகுதிநேர ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தமிழக அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இத்திட்டத்தின் கீழ் அரிசி வாங்கி வந்த 50க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளை தகுதி நீக்கம் செய்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கார்டு வைத்திருந்தவர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ரேசன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரேசன் கார்டுகளை எவ்வாறு தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் உரிய பதில் அளிக்கா விட்டால் யாருக்கும் ரேசன் பொருட்களை வழங்க விட மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×