நத்தம் அருகே பைக் மீது கார் மோதி கூலித்தொழிலாளி பலி

பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரியசாமி.
பெரியசாமி.
Published on

நத்தம்:

நத்தம் அருகே குட்டுப்பட்டி பெரியமலையூர் பள்ளத்துக்காடை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது35). இவர் வேலாயுதம்பட்டி பகுதியில் விவசாய தோப்பில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

வேலாயுதம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மெய்குரு(36) என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் உடலை கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com