search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opened for irrigation in the first week"

    • நிறுத்தப்பட்ட பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.
    • வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மதுரை, தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயராமல் உள்ளது.

    வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது லோயர்கேம்ப் அருகே குருவனூற்று பாலம் வண்ணாந்துறை பகுதியில் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த பணிகடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பணி மீண்டும் தொடங்கினால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கில் ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று காலை 118.05 அடியாக உள்ளது. 205 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.07 அடியாக உள்ளது. 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ×