என் மலர்

  ஆன்மிகம் - Page 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமகளின் பேரருளுக்கு பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.
  • குமரகுருபரின் சகலகலா வல்லி மாலை மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலை.

  கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. கம்பனின் சரஸ்வதி அந்தாதியும், ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபதும் குமரகுருபரின் சகலகலா வல்லி மாலையும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

  நாமகளின் பேரருளுக்கு பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர் பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர். சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரை திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டு சென்றனர். முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாக பொழிந்தார். முதற்பாட்டு முருகனின் போல் பாடிய கந்தர் கலிவெண்பா. அன்றிலிருந்து தான் அவருக்கு குமரகுருபரன் என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.

  திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னதியில் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடினார். அதை மன்னர் திருமலை நாயக்கன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள். அதில் தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே என்னும் பாடலின் பொது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.

  பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு பாரதநாட்டின் இதர பகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார். அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமே இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது. ஆகவே காசியில் ஒரு மடத்தை தோற்றுவிக்க நிச்சயித்தார்.

  அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷாஜகான் இருந்தார். அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார். அவரை காண சென்றார் குருபரர்.

  சித்தராகிய குருபரர் போகும் போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார். நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்கு தெரியாது. ஆகவே சரஸ்வதியை தியானித்து சகல கலாவல்லி மாலை எனும் பாடலை பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல் ஏற்பட்டது. நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாக உரையாடி தம் வேண்டுகோளை சமர்ப்பித்தார். மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் வழங்கினார். அன்றிலிருந்து குமரகுருபரன் மடத்தை காசி மடம் என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளை காசி வாசி என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

  ஆகவே, சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றி வைத்து முன்னால் ஒரு வெண்ணிற துணியை விரித்து, அதன் மீது புத்தகங்கள், எழுது கருவிகள், தொழிலுக்குரிய சாதனங்கள் ஆகியவற்றை வைத்து சகலகலா வல்லி மாலையை படித்துப் பூஜை செய்யலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.
  • பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1-ந் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

  பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

  தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது. அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

  தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

  கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

  திருப்பதியில் நேற்று 68,539 பேர் தரிசனம் செய்தனர். 21,077 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.90 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் ‘விஜயதசமி.’
  • விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  5.10.2022 விஜயதசமி திருநாள்

  அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழா, கடந்த 26-ந்தேதி தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடர்ந்து, 10-ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னையானவள், மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே 'விஜயதசமி' (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் 'ராம்லீலா' என்றும் கொண்டாடுகின்றனர்.

  புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் 'விஜயதசமி.' இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல் புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

  விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு 'வித்யாரம்பம்' என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங் களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென் மாவட்டங்களில் வேடம் அணிந்த பக்தர்களால் தசரா திருவிழா களைகட்டியது.
  • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

  கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் தசரா குழுக்களாவும் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர்.

  பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து காணிக்கை வசூலிக்கின்றனர். தசரா குழுவினரும் ஊர் ஊராக சென்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

  விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.

  9-ம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  10-ம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விஜயதசமி சிறந்த நாளாகும்.
  • அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த ஆண்டு விஜயதசமி தினம் 5.10.2022 புதன்கிழமை வருகிறது. குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கவும், புதிய பாடம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவதற்கும் விஜயதசமி சிறந்த நாளாகும்.

  அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் சந்திர ஓரையில் சேர்க்கலாம். அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குரு ஓரையில் பள்ளியில் சேர்க்கலாம்.

  இந்த இரு ஓரைகளில் சேர்த்தால், பாட்டு, நடனம் போன்ற கலைகளில் சிறப்பு ஏற்படும்.

  அன்று உலக ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவதரித்த தினமும் ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
  • இன்று ஒன்பதாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

  முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

  ஓம் அகர முதல்வா போற்றி!

  ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

  ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

  ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

  ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

  ஓம் உமையவள் மைந்தா போற்றி!

  ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

  ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

  ஓம் ஐங்கரனே போற்றி!

  ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

  ஓம் கற்பக களிறே போற்றி!

  ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

  ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

  ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

  ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

  ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

  ஒன்பதாம் நாள் போற்றி

  ஓம் ஓங்காரத்துப் பொருளேபோற்றி

  ஓம் ஊனாகி நின்ற உத்தமியேபோற்றி

  ஓம் படைத்தோன் பாகம் பிரியாய்போற்றி

  ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

  ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமேபோற்றி

  ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளேபோற்றி

  ஓம் நாற்பத்து முக்கோண நாயகியேபோற்றி

  ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

  ஓம் ஆறாது தத்துவம் அருளினாய்போற்றி

  ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமேபோற்றி

  ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய்போற்றி

  ஓம் அகண்ட பூரணி அம்மாபோற்றி

  ஓம் உண்ணும் சிவயோக உத்தமியேபோற்றி

  ஓம் பண் மறைவேதப் பாசறையேபோற்றி

  ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவேபோற்றி

  ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
  • இன்று 9-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

  9-வது நாள் 4-10-2022 (செவ்வாய்க்கிழமை)

  வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

  பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

  திதி : நவமி

  கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

  பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

  நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.

  ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

  பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
  • பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.

  சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.

  சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.

  சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

  எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து

  சுக்லாம் பரதரம் விஷ்ணும்

  சச்இவர்ணம் சதுர்புஜம்!

  பிரசந்த் வதனம் தீயாயேத்

  சர்வ விக்நோப சாந்தயே'

  என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

  சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

  பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
  • நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.

  ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.

  8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.

  9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

  திருப்பதியில் நேற்று 82,463 பேர் தரிசனம் செய்தனர். 35, 385 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.
  • நாளை சரஸ்வதி தேவிக்குரிய 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்யுங்கள்...

  ஓம் அறிவுருவேபோற்றி

  ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

  ஓம் அன்பின் வடிவே போற்றி

  ஓம் அநுபூதி அருள்வாய்போற்றி

  ஓம் அறிவுக்கடலேபோற்றி

  ஓம் அளத்தற்கு அரியவளேபோற்றி

  ஓம் அன்ன வாகினியேபோற்றி

  ஓம் அகில லோக குருவேபோற்றி

  ஓம் அருளின் பிறப்பிடமேபோற்றி

  ஓம் ஆசான் ஆனவளேபோற்றி

  ஓம் ஆனந்த வடிவேபோற்றி

  ஓம் ஆதாரசக்தியேபோற்றி

  ஓம் இன்னருள் சுரப்பாய்போற்றி

  ஓம் இகபர சுகம் தருவாய்போற்றி

  ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

  ஓம் ஈடேறச் செய்பவளேபோற்றி

  ஓம் உண்மைப் பொருளே போற்றி

  ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி

  ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

  ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

  ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

  ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

  ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

  ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

  ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

  ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

  ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி

  ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

  ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

  ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

  ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

  ஓம் குணக் குன்றானவளே போற்றி

  ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

  ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

  ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

  ஓம் சாந்த சொரூபினியே போற்றி

  ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

  ஓம் சாரதாம்பிகையே போற்றி

  ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

  ஓம் சித்தியளிப்பவளே போற்றி

  ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

  ஓம் சுத்தஞான வடிவே போற்றி

  ஓம் ஞானக்கடலானாய் போற்றி

  ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

  ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

  ஓம் ஞானேஸ்வரியே போற்றி

  ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

  ஓம் ஞான ஆசிரியையே போற்றி

  ஓம் ஞானத்தின் காவலே போற்றி

  ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

  ஓம் தகைமை தருபவளே போற்றி

  ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

  ஓம் தாயான தயாபரியே போற்றி

  ஓம் தண்ணருள் தருவாய் போற்றி

  ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

  ஓம் நவமி தேவதையே போற்றி

  ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

  ஓம் நன்னெறி தருபவளே போற்றி

  ஓம் நலம் அளிப்பவளே போற்றி

  ஓம் நாவிற்கு அரசியே போற்றி

  ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

  ஓம் நா நயம் அருள்வாய் போற்றி

  ஓம் நான்மறை நாயகியே போற்றி

  ஓம் நாவில் உறைபவளே போற்றி

  ஓம் நாதத்தின் தலைவியே போற்றி

  ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

  ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

  ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

  ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

  ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

  ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

  ஓம் பண்ணின் இசையே போற்றி

  ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

  ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

  ஓம் பிரணவ சொரூபமே போற்றி

  ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

  ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

  ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

  ஓம் பூரண வடிவானவளே போற்றி

  ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

  ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி

  ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

  ஓம் மங்கல வடிவானவளே போற்றி

  ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

  ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

  ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

  ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

  ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

  ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

  ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி

  ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

  ஓம் மேதையாக்குபவளே போற்றி

  ஓம் மேன்மை தருபவளே போற்றி

  ஓம் யாகத்தின் பலனே போற்றி

  ஓம் யோகத்தின் பயனே போற்றி

  ஓம் வழித்துணை வருவாய் போற்றி

  ஓம் வரம் அருள்பவளே போற்றி

  ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

  ஓம் வாக்கின் நாயகியே போற்றி

  ஓம் வித்தக வடிவினளே போற்றி

  ஓம் வித்யா லட்சுமியே போற்றி

  ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

  ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

  ஓம் வெண்தாமரையினாளே போற்றி

  ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

  ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

  ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

  ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
  • இன்று எட்டாம் நாளுக்குரிய போற்றி பாடலை பார்க்கலாம்.

  முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

  ஓம் அகர முதல்வா போற்றி!

  ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

  ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

  ஓம் இந்திரன் இளம்பிறைபோற்றி!

  ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

  ஓம் உமையவள் மைந்தா போற்றி!

  ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

  ஓம் எருக்கினில் இருப்பாய்போற்றி!

  ஓம் ஐங்கரனே போற்றி!

  ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

  ஓம் கற்பக களிறே போற்றி!

  ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

  ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

  ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

  ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

  ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

  எட்டாம் நாள் போற்றி

  ஓம் வேத மெய்பொருளேபோற்றி

  ஓம் மேனிக் கருங்குயிலேபோற்றி

  ஓம் அண்டர் போற்றும்

  அருட் பொருளே போற்றி

  ஓம் எண்திசை ஈஸ்வரியேபோற்றி

  ஓம் எங்கும் நிறைந்தவளேபோற்றி

  ஓம் மாயோனின் மனம்

  நிறைந்தவனே போற்றி

  ஓம் தூய ஒளியாய் தெரிபவளேபோற்றி

  ஓம் சிங்க வாகினித் தேவியேபோற்றி

  ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவேபோற்றி

  ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய்போற்றி

  ஓம் துன்பம் துடைக்கும் தூமணிபோற்றி

  ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய்போற்றி

  ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தேபோற்றி

  ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமேபோற்றி

  ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய்போற்றி

  ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
  • இன்று 8-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

  8-வது நாள் 3-10-2022 (திங்கட்கிழமை)

  வடிவம்: நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

  பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

  திதி: அஷ்டமி

  கோலம் : பத்ம கோலம்

  பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தா மரை, குருவாட்சி.

  நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

  ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

  பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.