search icon
என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

     

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இரட்டையர் பிரிவில் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 289 ரன்களில் டிக்ளேர் செய்தது.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்கள் எடுக்கத் திணறியது. 55 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இவர்களில் உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மெக்கின்ஸ் 41 ரன்னும், அதனாஸ் 35 ரன்னும், கிரீவ்ஸ் 33 ரன்னும், ஹாட்ஜ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையிலும் இந்த டெஸ்டையும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் சீனாவின் ஜெங்கை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் சபலென்கா.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.


    இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது இவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
    • அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.

    முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

    • முதல் அரையிறுதியின் முதல் 2 செட்டை சின்னர் எளிதில் வென்றார்.
    • மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார்.

    இறுதியில், சின்னர் 6-1, 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • முதல் அரையிறுதியில் சீனாவின் ஷெங் வென்றார்.
    • 2வது அரையிறுதியில் சபலென்கா எளிதில் வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, சீனாவின் குயின்வென் ஷெங்குடன் மோதினார். இதில் ஷெங் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இரண்டாவது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கவூப்புடன் மோதினார். இதில் சபலென்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா, ஷெங் ஆகியோர் மோதுகின்றனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- சீனாவின் சாங் சீசென், செக் நாட்டின் தாமஸ் மெக்காக் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

    • முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
    • மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 166 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.

    சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.

    பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.

    • முதல் காலிறுதியில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர்.
    • வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

    இதில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.

    இறுதியில், மெத்வதேவ் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- அர்ஜெண்டினாவின் மால்டெனி, கோன்சலேஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • இன்று நடந்த 2வது காலிறுதியில் சபலென்கா வென்றார்.
    • அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபை சந்திக்கிறார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் பெலார்சின் அரினா சபலென்கா, செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பார்பராவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவூபுடன் மோதுகிறார்.

    ×