search icon
என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • பணி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் செல்போனை அணைத்து வைக்கலாம்
    • மின்னஞ்சலை பார்க்கும்படி இனி ஊழியர்களை நிறுவனங்கள் கட்டாயப்படுத்த முடியாது

    ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் (Senate) மற்றும் பிரதிநிதிகளின் சபை (House of Representatives) என இரு அவைகள் உள்ளன.

    செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி "ரைட் டு டிஸ்கனெக்ட்" (Right to Disconnect) எனும் "தொடர்பு அறுக்கும் உரிமை" குறித்து சட்டம் இயற்றியது.

    இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் செல்போன் அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) இந்த சட்டத்திற்கு பெரும் ஆதரவு வழங்கியுள்ளார்.


    இச்சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அந்தோனி அல்பானீஸ், "24 மணி நேர பணிக்காக ஊதியம் வாங்காத ஒருவர் பணி நேரம் முடிந்தும் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.

    மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

    தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.

    இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
    • இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்பட மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

    மெல்போர்ன்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்கின்றன.

    அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் ஷமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    கடந்த ஆண்டு முதல் நாங்கள் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறோம். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. சொந்த மண்ணில் இம்முறை டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்தக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் முதல் அணியாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறேன்.

    எங்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடவில்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களது அணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இம்முறை டி20 உலக கோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ரன்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலிஸ் 39 ரன்னும், டிம் டேவிட் 37 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 43 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலிஸ் 39 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் டிம் டேவிட், மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கும் மேல் குவித்தது. டிம் டேவிட் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
    • சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் 'சுவிட்ச் ஆப்' செய்துகொள்ளும்

    சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    வேலைநேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

    • இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" நூலின் மீது பிரமாணம் செய்து கொண்டார்
    • வருண் கோஷின் பெற்றோர், நரம்பியல் துறையில் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    ஆஸ்திரேலிய பாராளுமன்றம், செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகளும், "அரசர்" எனும் அந்தஸ்தில் கவர்னர்-ஜெனரல் ஒருவரையும் கொண்டது.

    செனட் பதவிக்கு, மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாரிஸ்டர் பட்டம் படித்த, இந்திய வம்சாவளியினரான வருண் கோஷ் (Varun Gosh) என்பவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.

    இந்நிலையில், தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித "ஸ்ரீபகவத் கீதை" (Sri Bhagavad Gita) மீது பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.

    ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இவ்வாறு நடைபெறுவது இதுவே முதல்முறை.

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), வருண் கோஷ் பதவியேற்றது குறித்து எக்ஸ் கணக்கில் மகிழ்ச்சியுடன் தனது பாராட்டுகளை தெரிவித்து அவரை வரவேற்றுள்ளார்.

    1985ல் ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெர்ரா (Canberra) நகரில் பிறந்தவர் வருண் கோஷ்.

    மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர், நரம்பியல் துறை மருத்துவர்கள். வருண், கலை மற்றும் சட்டப்படிப்பில் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அத்துடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றவர்.

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உலக வங்கியில் (World Bank) ஆலோசகராகவும் பணி புரிந்தார்; நியூயார்க் நகரில் நிதித்துறை சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    தனது 17-வது வயதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் லேபர் கட்சியில் சேர்ந்தது முதல் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

    தனது பதவி குறித்து பேசும் போது, "மிக உயர்ந்த கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உயர்தர கல்வியும், பயிற்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என வருண் கோஷ் தெரிவித்தார்.

    • டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்போட் 69 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 175 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன் மூலம், ஆஸ்திரேலியா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கீசி கார்ட்டி 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் ஹெசில்வுட் மற்றும் சீன் அப்போட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    • 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.
    • 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    இதில், இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில், 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. 

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பின், வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அவர் பேசியதாவது;-

    எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார். அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது.

    நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த பலம் உங்களுக்கு போதுமா ?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீசின் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 64 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் ஆடியது. 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஸ்மித் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். ஷமார் ஜோசப் சிறப்பாக பந்து வீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்களில் ஆல் அவுட்டானது. ஸ்மித் 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷமார் ஜோசப்புக்கு வழங்கப்பட்டது.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

     

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இரட்டையர் பிரிவில் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 289 ரன்களில் டிக்ளேர் செய்தது.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்கள் எடுக்கத் திணறியது. 55 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இவர்களில் உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மெக்கின்ஸ் 41 ரன்னும், அதனாஸ் 35 ரன்னும், கிரீவ்ஸ் 33 ரன்னும், ஹாட்ஜ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையிலும் இந்த டெஸ்டையும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் சீனாவின் ஜெங்கை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் சபலென்கா.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.


    இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது இவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×