search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வார்னர், ஜாம்பா அபாரம்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
    X

    வார்னர், ஜாம்பா அபாரம்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    • முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ரன்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இங்கிலிஸ் 39 ரன்னும், டிம் டேவிட் 37 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜான்சன் சார்லஸ் 43 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×