search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலெக்சாண்டர் ஸ்வரேவ்"

    • 2வது அரையிறுதியின் முதல் 2 செட்டை ஸ்வரேவ் எளிதில் வென்றார்.
    • அடுத்த 3 செட்களை மெத்வதேவ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்ட ஸ்வரேவுடன் மோதினார்.

    முதலில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் இரு செட்களை எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த 3 செட்களையும் சிறப்பாக ஆடி கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், மெத்வதேவ் 5-7, 3-6, 7-6 (7-4), 7-6 ( 7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷியாவின் மெத்வதேவ், இத்தாலி வீரரான சின்னரை எதிர்கொள்கிறார்.

    • முதல் இரு செட்களை அலெக்சாண்டர் ஸ்வரேவ் வென்றார்.
    • மூன்றாவது செட்டை கார்லோஸ் அல்காரஸ் போராடி கைப்பற்றினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 3-6, 7-6 (7-2), 4-6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரீம்கா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் யாஸ்ட்ரீம்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நோஸ்கோவாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஷெங், ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார். இதில் ஷெங் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் போராடி வென்றார்.
    • ஜோகோவிச், காஸ்பர் ரூட் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்லோவோக்கியா வீரர் லூகாசுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை லூகாஸ் 6-3, 6-4 என கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் 4-வது 7-6 (7-5) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் ஸ்வரேவ் 7-6 (10-7) என போராடி வென்றார்.

    இறுதியில் ஸ்வரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5), 7-6 (10-7) என கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டி சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.


    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை ரூட் கைப்பற்றினார். இறுதியில் ரூட் 6-3, 6-7, 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்றார்.

    ×