என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி
    X

    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
    • இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    துரின்:

    உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

    அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 7-6 (8-6) என வென்றார்.

    Next Story
    ×