search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்- பிரதமர் மோடி, சோனியா, ராகுல் காந்தி பிரசாரம்
    X

    தெலுங்கானாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்- பிரதமர் மோடி, சோனியா, ராகுல் காந்தி பிரசாரம்

    தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரசை ஆதரித்து முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். #Modi #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.

    பாஜகவினரை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.



    பிரதமர் மோடி நிஜாமாபாத், வாரங்கல்லில் 27ம் தேதியும், ஐதராபாத்தில் டிசம்பர் 3ம் தேதியும் பிரசாரம் செய்கிறார். தெலுங்கானாவில் உள்ள 5 தொகுதிகளில் நவம்பர் 25 மற்றும் 28ம் தேதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிற 23-ம் தேதி பிரசாரம் செய்வார்கள். மேட்கல் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியா காந்தி முதல் முறையாக அங்கு சென்று பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #SoniaGandhi #RahulGandhi
    Next Story
    ×