search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்படிக லிங்கம்"

    • அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
    • கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.

    ராமேசுவரத்தின் வரலாறு ராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது.

    சோழ மன்னர் ராசேந்திர சோழன் ஆட்சியில் சிலகாலம் ராமேசுவரம் இருந்து வந்துள்ளது.

    1215-1624 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது.

    யாழ்ப்பாண அரசர் சேதுகாவலன் என அழைக்கப்பட்டார்.

    இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர்.

    அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார்.

    இசுலாத்தின் வெற்றியை நினைவு கூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார்.

    பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால ராமநாதபுரம், கமுதி, ராமேசுவரம் பகுதிகள் பாண்டிய ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன.

    கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.

    மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் ராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர்.

    இவர்கள் ராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர்.

    முக்கியமாக முத்துக்குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டிட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டிடக்கலையாக அமைத்தனர்.

    18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740&1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725&1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.

    கி.பி. 1795&ல் ராமேசுவரம் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது.

    சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947&க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.

    • ‘படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்’.
    • ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது.

    ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேசுவரம் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றதாகும்.

    இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.

    'படிக லிங்க தரிசனம், கோடி பாப விமோசனம்'.

    இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேசுவரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை.

    இங்குள்ள அக்னி தலத்தில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதுவும் நம்பிக்கையாக இருக்கிறது.

    ராமேசுவரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னதி இருக்கிறது.

    இந்த சன்னதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய 'கோடி தீர்த்தம்' அமைந்துள்ளது.

    சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

    வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும்.

    • எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
    • உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

    ஒரு சமயம் இக்கோவில் லிங்கம் மணலால் செய்யப்பட்ட தல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.

    அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.

    அந்த லிங்கம் கரையவில்லை.

    அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாத போது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.

    ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.

    உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

    பதஞ்சலி முக்தி தலம்

    பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்துக்கு நடராஜர் காட்சி தருகிறார்.

    இவரது எதிரில் நந்தி இருக்கிறது.

    நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு சக்கரம் மட்டும் உள்ளது.

    இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாக வடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.

    பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்.

    • சக்தி பீடங்களில் இத்தலம் “சேது பீடம்” ஆகும்.
    • விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

    தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.

    இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

    இந்த அபிஷேகத்தை தரிசக்க கட்டணம் உண்டு.

    பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

    சக்தி பீடங்களில் இத்தலம் "சேது பீடம்" ஆகும்.

    அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

    விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

    இந்த பாவம் நீங்க விபிஷணன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

    அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி-இந்த லிங்கத்தில் ஐக்கியமானார்.

    இதுவே "ஜோதிர்லிங்கம்"ஆயிற்று.

    இந்த லிங்கம் சுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

    ஆஞ்சநேயருக்கு தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

    ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.

    ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால் தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.

    அதன்படி இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.

    விசாலாட்சிக்கு தனி சன்னதி இருக்கிறது.

    சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சக்ர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.

    அம்பாள் சன்னதியில் அஷ்ட லட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

    பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.

    இந்தக் கோவில் எந்தப் பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால் சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

    கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது. வித்தியாசமான அமைப்பு.

    • உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பு வித்தியாசமானது.
    • மணல் குளம் மீது அமர்ந்ததால் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்று பெயர்.

    1960-களில் மணக்குள விநாயகர் ஆலய தேவஸ்தான நிர்வாகக் குழுத் தலைவராக அட்வகேட் ராமச்சந்திர ரெட்டியார் இருந்தார். செஞ்சியை அடுத்துள்ள வாத்தியில் இருக்கும் இவரது வயலை விவசாயத்துக்காக உழுத போது அழகான ஸ்படிக லிங்கம் ஒன்று பூமியில் இருந்து கிடைத்தது.

    அந்த ஸ்படிக லிங்கத்தை 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி மணக்குள விநாயகர் கோவிலுக்கு ராமச்சந்திர ரெட்டியார் கொடுத்துவிட்டார். அவருடைய செலவில் அப்போதைய புதுச்சேரி கவர்னராக இருந்த பி.டி. ஜாட்டி முன்னிலையில் அந்த ஸ்படிக லிங்கம் கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    அன்று முதல் ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த அபிஷேக பூஜையில் பங்கேற்பது சிறப்பானதாக கருதுப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு ஜாம பூஜைகள் இந்த ஸ்படிக லிங்கத்துக்கு நடத்தப்படுகிறது.

    மிகவும் ராசியான உற்சவ மூர்த்தி

    மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த உற்சவர் சிலை 1950 களில் பழுது பட்டதால் புதிய உற்சவ மூர்த்தியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் குடை வியாபாரம் செய்து வந்த ரா.மா. கோவிந்தசாமி பிள்ளை ஒரு உற்சவர் சிலையை தயாரித்துக் கொடுத்தார்.

    3.2.1956-ம் அன்று அந்த உற்சவர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த உற்சவருக்கும் மணக்குள விநாயகர் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உற்சவ நாட்களிலும், முக்கிய நாட்களிலும் இவர்தான் வீதி உலா செல்வார். இந்த உற்சவர் மிக, மிக ராசியான உற்சவராக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் இந்த ஆலயத்துக்கு வந்த பிறகுதான் மணக்குள விநாயகரை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டதாம்.

    இந்த உற்சவ மூர்த்தியின் உருவ அமைப்பும் வித்தியாசமானது. இவரது கண் புருவம் வில் போன்ற அமைப்புடன் உள்ளது. எந்த ஒரு விநாயகர் சிலையிலும் இத்தகைய வில் புருவத்தை காண இயலாது.

    மேலும் இந்த உற்சவர் திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். இதுவும் வித்தியாசமான அமைப்பாக கருதப்படுகிறது.

    கருவறைக்குள் ஊறும் தண்ணீர்

    மணல் குளம் மீது அமர்ந்ததால்தான் விநாயகருக்கு மணக்குள விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இப்போது அந்த குளம் இல்லாவிட்டாலும், அதன் ஒரு சிறு பகுதி கருவறைக்குள் உள்ளது.

    மணல் குளம் இருந்ததற்கு அடையாளமாக, விநாயகரின் கருவறையில் அக்னி மூலை எனும் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய பள்ளம் அமைத்துப் பழைய குளக்கரையின் பெருமை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.

    கருவறை பீடத்தின் மேல் தகட்டை தூக்கினால், அங்கு அந்த சிறிய பள்ளத்தை பார்க்க முடியும். அதனுள் கை விட்டால் குளக்கரையில் மணல் இருப்பது போன்று மணலை உணர முடியும். இந்த பகுதி இருளாக இருக்கும் என்பதால் குருக்கள் சூடம் காட்டும் போது மட்டுமே தெரியும்.

    தினமும் காலை கருவறை வாசலை திறக்கும் போது அந்த பள்ளத்தில் இருந்து குளத்து தண்ணீர்பொங்கி தேங்கி இருக்குமாம். அதை மிகச் சிறந்த தீர்த்தமாக கருதுகிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகில் காணிப்பாக்கத்தில் உள்ள புகழ் பெற்ற விநாயகர் ஆலயத்திலும் கருவறையில் கிணறு மீது விநாயகர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். அங்கு விநாயகரை சுற்றி கிணற்று நீர் வந்தபடியே உள்ளது. அதை தீர்த்தமாக கருதுகிறார்கள்.

    அந்த வகையில் மணக்குள விநாயகரும், காணிப்பாக்கம் விநாயகரும் புனித தீர்த்தத்தின் மீது அமர்ந்து ஒரே மாதிரி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×