search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராமேசுவரம் நகரின் வரலாறு
    X

    ராமேசுவரம் நகரின் வரலாறு

    • அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
    • கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.

    ராமேசுவரத்தின் வரலாறு ராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது.

    சோழ மன்னர் ராசேந்திர சோழன் ஆட்சியில் சிலகாலம் ராமேசுவரம் இருந்து வந்துள்ளது.

    1215-1624 காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது.

    யாழ்ப்பாண அரசர் சேதுகாவலன் என அழைக்கப்பட்டார்.

    இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர்.

    அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார்.

    இசுலாத்தின் வெற்றியை நினைவு கூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார்.

    பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால ராமநாதபுரம், கமுதி, ராமேசுவரம் பகுதிகள் பாண்டிய ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன.

    கி.பி. 1520 ல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.

    மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் ராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர்.

    இவர்கள் ராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர்.

    முக்கியமாக முத்துக்குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டிட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டிடக்கலையாக அமைத்தனர்.

    18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740&1754), ஆற்காடு நவாப், மருதநாயகம் (1725&1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.

    கி.பி. 1795&ல் ராமேசுவரம் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது.

    சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947&க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.

    Next Story
    ×