search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஸ்படிக லிங்க பூஜை
    X

    ஸ்படிக லிங்க பூஜை

    • சக்தி பீடங்களில் இத்தலம் “சேது பீடம்” ஆகும்.
    • விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

    தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.

    இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

    இந்த அபிஷேகத்தை தரிசக்க கட்டணம் உண்டு.

    பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

    சக்தி பீடங்களில் இத்தலம் "சேது பீடம்" ஆகும்.

    அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

    விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

    இந்த பாவம் நீங்க விபிஷணன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

    அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி-இந்த லிங்கத்தில் ஐக்கியமானார்.

    இதுவே "ஜோதிர்லிங்கம்"ஆயிற்று.

    இந்த லிங்கம் சுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

    ஆஞ்சநேயருக்கு தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

    ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.

    ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால் தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.

    அதன்படி இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.

    விசாலாட்சிக்கு தனி சன்னதி இருக்கிறது.

    சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சக்ர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.

    அம்பாள் சன்னதியில் அஷ்ட லட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

    பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.

    இந்தக் கோவில் எந்தப் பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால் சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

    கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது. வித்தியாசமான அமைப்பு.

    Next Story
    ×